உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

ஆக்கியோன் வரலாறு :

இப்பகுதியில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அந்தணர் என்பதையும் கடியலூர் என்னும் ஊரிற் பிறந்தவர் என்பதையும் விளக்குகிறார். இவர்தம் சமயம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருபாற் கருத்துகளை உரைக்கிறார்.

பெரும்பாணாற்றுப் படையில் இப்புலவர் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்றமையால் வைணவ சமயத்தார் எனின், தொண்டைமான் வழிபடு கடவுள் திருமால் ஆகலின் அதனை வழிபட்டுச் செல்ல அப்பாணரை நோக்கிக் கூறினாரன்றித் தாம் வழிபடு தெய்வமாகக் குறித்தார் எனல் ஆகாது என்கிறார். அவ்வாறு வைணவர் எனின், கடம்பமர் நெடுவேள் என முருகக் கடவுளைக் கூறியது கொண்டு இவர் சைவ சமயத்திற்கரியவர் என்பார்க்கு மறுத்துரைக்கலாகாமையின் இவர் சமயம் இதுவென்பது துணியப்படாது போலும் என்க என்கிறார். மேலும் இவர் பெயரால், உருத்திரனுக்குக் கண் போன்ற இளைய பிள்ளையாரான முருகக் கடவுளைக் குறிப்பதால் அப்பெயரைச் சைவ சமயம் தழுவினாரே வழங்குதல் மரபாதலால் இவர் சைவ சமயத்திற்குரியராம் போலும் எனக் கூறல் இழுக்காது என்கிறார். பாட்டின் நலம் :

பாட்டின் நலம் வியத்தல் பகுதியில், உவமையின் சிறப்பை இனிதின் ஆய்கின்றார்.

பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டு போம் நெறி தன்மை நவிற்சி எனவும், அங்ஙனம் சொல்லிப் போதற்கு டை இடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவை வேறுபடுத்தி அப்பொருளொடு இயைந்த பிற பொருட் டோற்றத்தை எழுப்பு நெறி உவமை உருவகம் எனவும், பெயர் பெறா நிற்கும். இவற்றின் வேறாக ஆயிரம் புனைந்துரைகள் கூறினாராயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே அடங்கும் என்று கூறித் தொல் காப்பியனார் உவமவியல் ஒன்றே வகுத்துக் காட்டிய உயர்வை விரிக்கிறார்.

உருத்திரங்கண்ணனார், இப்பட்டினப்பாலையில் இருபது உவமைகள் காட்டியுள்ளமையை வரம்பிட்டுரைக்கும் இவர் அவ்வுவமை யமைதியையும் விளக்குகிறார்.

உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனவுணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக்