உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

141

கூறும் வழியெல்லாம் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகு பெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் பாராட்டற்பாலது என்கிறார்.

ஆசிரியர், உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்துக் கூறுவதையும், உலக இயற்கைப் பொருள் தோற்றங்களை இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெருமகிழ்ச்சி அடைந்தவர் என்பதையும், வானநூல் வல்லுநராகத் திகழ்ந்தார் என்பதையும் விரித்துரைக்கிறார். வரலாற்றுக் குறிப்புகள் :

இப் பகுதியில் பௌத்த சமண சமய வளர்ச்சி, பரவியவகை என்பவற்றை அசோகர்கல்வெட்டு பாகியாள் வழிநடைக் குறிப்பு என்பவற்றாலும் சைன சூத்திரம், மணிமேகலை என்பவற்றாலும் உறுதிப்படுத்தி உருத்திரனார் உரைப் பொருத்தத்தை ஏற்கிறார்.

கடல் வாணிகம், பண்டையரசர் செங்கோன்மை, கந்தழி என்பவற்றை ஆய்ந்துரைக்கிறார். கரிகால் வேந்தன் போர்த்திறம் அறச் செயல் என்பவற்றையும் தொகுத்துரைக்கிறார்.

பாவும் பாட்டின் நடையும்:

இப்பகுதியில் நால்வகைப் பாவும் அகவல், வெண்பா என இரண்டனுள் அடங்குதலைத் தொல்காப்பிய தொல்காப்பிய வழியில் எடுத்துரைக்கிறார். அகவலும் வஞ்சியும் கலந்த பட்டினப் பாலை நடையை, அகவலோசையும், இன்பங் குறையாமைப் பொருட்டுத் தூங்கலோசையும் கொண்டிருத்தலையும், அகவலடிகள் 138 என்றும் வஞ்சியடிகள் 163 என்றும் அவற்றின் இயைபு பாலும் தேனும் கலந்தாற்போன்றது என்றும், இஃது உருத்திரங்கண்ணனார் இசையறிவு மாட்சி என்றும் இயம்புகிறார்.

வஞ்சி அடிகள், அகவலடிகளை ஆங்காங்கு ஒரு சேரக் கூறுமிடத்தும் அவை ஓரோசையாய்ச் செல்ல வொட்டாமல் எதுகை மோனை முதலிய எழுத்தமைதிகளானுஞ் சிறிது சிறிது ஓசை வேறுபடுத்திப் போகின்றார் என்பதை நன்கனம் எடுத்துக் காட்டி விளக்குகிறார்.

தம்மாற் பாடப்படும் பொருள் வழியே தம் அறிவை வைத்து மொழிந்து போகுங்கால் இடர்ப்படாது தோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக்