உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ் வளம் 228

கேற்ற எதுகை மோனை எளிதிற்றோன்றா விடத்து எதுகை போல ஓசை பொருந்துஞ் சொற்களைப் பதித்திடுகின்றார் என்று எடுத்துக் காட்டுகின்றார்.

ஒருகாலத்தினரும்

பொருளுக்கு இசையச் சொற்பொருத்தும் முறை இவ்வாசிரியரோடு இவர்க்கு முன்னோருமான பண்டைச் செந்தமிழ்த் தண்டா நல்லிசைப் புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம் என்று பாராட்டும் இவர், பிற்றை ஞான்றைத் தமிழ்ப் போலிப் புலவரோ பொருட்சிறப்புச் சிறிதுமின்றி வெறுஞ் சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக் கழித்துத் தெளி தமிழுக்குந் தமக்கும் இழுக்குத் தேடுவாராயினர் என்று று இரங்குகின்றார்.

இப்பாட்டின் நடையை, இனிய தெளிதமிழ்ச் சுவையூறிய முழுமுழுச் சொற்களால் இப்பாட்டு முற்றும் அமைந்திருக்கிறது. அவற்றின்கட் டொடர்புபட்டு எழூஉம் இன்னோசை குழல் யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவும் தித்தியா நின்றது என்றும்,

நீர்மடையிலே தெள்ளத் தெளிந்த அருவிநீர்திரண்டு ஒழுகுதல் போல் இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழுமொழுவெனச் செல்கின்றது என்றும்,

மாம்பழச் சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவை நீட்டினும் அதன் வழியே யொழுகும் அச்சாறு தித்தித்தல் போல, இவ்வரிய செய்யுள் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையா நின்றது என்றும்,

பயன்படாது நிற்கும் சொல் ஒன்று தானும் இதன்கண் காணப்படுவதில்லை. விலை வரம்பறியாப் பட்டாடையின்கண் ஒவ்வோர் இழையும் பிணைந்து நின்று அவ்வாடையினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றை ஒன்று கௌவிக் கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது என்றும் இப்பாட்டின் நயங்களைப் பாராட்டுகிறார்.

அடிகளார் ஒரு நூலை எப்படிச் சொல் சொல்லாக எண்ணிப் படித்தார் என்பதை விளக்குவதுபோல், "இப்பாட்டின்கண் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி,