உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமம்

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

143

ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம்," என்பவனாம். ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டிற்குரிய திசைக் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன் என்பது அறியற் பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்த தென்பது புலப்படும் என்க” என்கிறார்.

து

எடுத்துக் கொண்ட பாட்டை ஆர்வத்தால் பாராட் டுகிறார். என்று எண்ணுவார். உண்டாயின் "இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுகளோடும் ஒப்ப வைத்து நோக்குங்கால் இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை என்றும், இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம்முல்லைப் பாட்டில் காண்டல் அரிது, இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்பட வில்லை என்றும், இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம்முல்லைப் பாட்டில் காண்டல் அரிது, இஃது ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாய் இருக்கின்றது" என்றும், “ஏனைப் பாட்டுகளிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின் இது தன்னைக் கற்பார்க்கு ஏனைய போல் மிக்க சொல்லின்பம் பயவாது என்று கருதுகின்றாம் என்றும் எழுதுகின்றார் (முல்லைப் பாட்டு 57)

அடிகளார் ஆய்வுத் திறத்தை வெளிப்படுத்தத் தக்க மற்றொரு குறிப்பும் இதன்கண் உண்மை அறியத் தக்கதாம்.

முல்லைப் பாட்டின் நடையினால் அதனை இயற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும் வல்லென்ற இயல்பும், அறிவாழமும் மிக்க மன அமைதியும் உடையர்என்பது குறிப்பாக அறியப்படும் என்றும், காட்டிடத்தையும் மழைக் காலத்தையும் தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச் செய்யுள் யாத்தமையானும் துறவோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அவையே இவர் தன்மையாம் என்பது தெளியப்படும்என்றும் நுண்ணிதின் ஆய்ந்து கூறுவது அஃதாம். விளக்க உரைக் குறிப்புகள் :.

இப்பகுதியில் மிக இன்றியமையாத மாட்டு என்பதன் இலக்கணத்தை முற்பட விரிவாக ஆய்ந்து தெளிவாக வரைதலை