உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

அவர் வீர சைவராய்ச் சிவலிங்க அருட்குறியைத் தம் திருமேனியில் அணிந்திருந்தார் என்பது எந்தையே ஈசா உடல் இடங் கொண்டாய் “என் மெய்ந் நாடொறும் பிரியா வினைக் கேடா" என விளங்கக் கூறுமாற்றால் அறியப்படும் (865)

கடல் அகற்சி

மாணிக்கவாசகர் காலத்தே தில்லைநகரின் அருகே கடல் நின்றது என்பதூஉம் திருஞான சம்பந்தர் காலத்தே அக்கடல் அந்நகரை விட்டு ஒருகல் வழி எட்டிப் பின்னிட அக்கடல் நீரொடு தொடர்புடைய ஒருகழி மட்டுமே. அந்நகரின் பாங்கர் நின்ற தென்பதூஉம், இஞ்ஞான்று அக்கடல் தில்லையை விட்டு ஏழு கல் விலகிப் போய்விட்டதைக் கணக்குச் செய்யச் சிறிதேறக் குறைய 225 ஆண்டுகளாவது சென்றதாகல் வேண்டும், (874) மொழி, மொழிபொருள் :

சமயாசிரியர் மூவர்க்கும் திருமூலர்க்கும் மாணிக்கவாசகர் பின்னவர் எனின் அவர்தம் சொற்கள் சொற்றொடர்கள் யாப்பு ஆகியவற்றை எடுத்தாண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இன்றி மாணிக்கவாசகர் கையாண்ட சொற்கள் சொற் றொடர்கள் யாப்பு ஆகியவற்றை அவர்கள் கொண்டுள்ள சான்றுகள் மிகப் பலவாம் (875-887)

கோயில் அடியார் :

சிவபிரான் திருக்கோயில்கள் பண்டை நாளில் எத்துணை இருந்தன, பின்றை நாளில் எத்துணை இருந்தன என ஆராய்ந்து பார்க்கும் முகத்தானும் ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர் முன்னவர் என்பது விளங்கும், (883)

மாணிக்க வாசகராற் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணை பேர் அப்பர் சம்பந்தரால் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணைபேர் என ஆராயு முகத்தானும் அவர்க்கு மாணிக்கவாசகர் முன்னவர் என்பது புலப்படும் (892) எனப் பன்னெறி ஆய்வுகளாலும் மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண் ன் முற்பகுதி என்பதை உறுதிப் படுத்துகிறார்.

டி

ஓராய்வு (குறிப்பாகக் கால ஆய்வு) எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்னும் நெறிமுறையைக் காண விரும்புவார்க்கு இலக்கண நெறிமுறை நூலாகத் திகழ்வது அடிகளார் அருளிய மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் நூல் என்றமைதல் சாலும்.