உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அடிகளாரின் அறிவியல் ஆராய்ச்சித்

திறன்

மக்கள் நூற்றாண்டு உயிர் வாழ்க்கை

அடிகளார் இயற்றிய தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை முதலியன அவர்தம் அறிவியல் ஆராய்ச்சித் திறத்தின் சான்றுகளாக விளங்குவன. இவற்றுள் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்பதொன்றை நாம் ஆராய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் விரிவு மிக்கதேயாம். ஆதலால் அதனையும் சுருங்கிய அளவால் ஆய்ந்து அடிகளார் ஆராய்ச்சித் திறத்தை அறிவோம்.

மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்பது இரண்டு பாகங்களாய்த் தமிழ் ஆங்கில முன்னுரைகளுடன் 658 பக்க அளவில் அமைந்துள்ளது. சில நூல்களைக் கொண்ட பெருநூல் அது என்பதை அதில் வரும் 13ஆம் இயலான உணவு, 14, 15 ஆம் இயல்களான பொருந்தாவுணவு என்பவற்றைக் கொண்டு "பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்" என்னும் பெயரால் கிளை நூல் ஒன்று கிளைத்தமையால் அறியலாம். நெடிய ஆய்வு

17

மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை அடிகளாரின் ஞானசாகரம் என்னும் திங்கள் வெளியீட்டின் ஐந்தாம் பதுமத்து முதல் இதழில் வெளிவரத் தொடங்கியது. "நீண்ட வாழ்க்கை' என்பதே முதல் இயல்.நூற்பெயரோ "மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி?" எனப் பெயரிய இந்நூல் என முதற் பதிப்பின் முகவுரை கூறுவதால் வெளிப்படும்.

இதழில் வெளிப்பட்டும் தடைப்பட்டும் 24 ஆண்டு களுக்குப் பின்னரே முடிவு பெற்றது. இக்காலமெல்லாம் இது பற்றிய தமிழ் ஆங்கில வடமொழி நூல்களைப் பயின்றும், அச் செய்திகளைத் தம்மிடத்துச் செயற்படுத்திப் பார்த்தும்,