உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

அவற்றுள் எவை மிகச் சிறந்தவையாய்ச், செலவில்லனவாய் எளிதிற் செய்து பயன்தரத் தக்கனவாய் தெளியப் பட்டனவோ அவற்றையே இந்நூலில் வரைந்தார்.

இரக்க நூல்

.

இத்தகையதொரு பயன் சிறந்த உரை நூல் தமிழ் மொழிக்கண் இல்லாப் பெருங்குறையால், ஆண் பெண் பாலாரிற் பெரும்பகுதியினர் தமது வாழ்க்கையில் பிழைமிக ஒழுகிப் பல்வகை நோய்களாலும் பொருட் செலவாலும் வறுமையாலும் பிடியுண்டு. தாம் ஆண்டு முதிரா முன்னரே இறந்தொழிவதல்லாமலும் தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும், அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் எல்லாம் அங்ஙனமே பெருந்துன்பங்களுக்கு வழிவழி ஆளாகி மடிந்து போகவும் செய்து விடுகின்றனர். தமிழ் மக்களின் துன்பம் மிகுந்த இக்குறுவாழ்க்கையைக் கண்டு எமதுள்ளத்தில் உண்டான இரக்கமே இந்நூலியற்ற வெளியிடுமாறு எம்மைத் தூண்ட லாயிற்று எனத் தமக்கு நேரிட்ட நூலியற்றல் தூண்டலை வரைந்துளார் அடிகள்.

எழுதிய முறை :

இந்நூலை எழுதியுள்ள முறை பற்றியும் விளக்குகிறார் :

'மக்கள் வாழ்க்கையைப் பற்றிய இந்நூலில், எந்தப் பகுதியையும் மறைத்தெழுதுதல் ஆகாமையாலும், அன்றி, அங்ஙனம் மறைத்தெழுதினால் இன்றியமையாது தெரிந்து ஒழுக வேண்டிய முறைகள் விடப்பட்டு, அதனால் ஆண் பெண் பாலாரை இஃது அறியாமையினின்று எடுக்கமாட்டாதாய்ப் பயனின்றிக் கழியு மாதலாலும் ஆண் பெண் சேர்க்கை, மக்கட்பேறு, கருவிலக்கு முதலான பகுதிகளிற் சொல்ல வேண்டுவனவெல்லாம் ஒரு சிறிதும் மறையாமல் சிறப்பாகவே வரைந்திருக்கின்றேம்" என்கிறார்.

முதற்பாகத்தில் நீண்ட வாழ்க்கை, உயிர்க்காற்று, மூச்சுப் பழக்கம், நெருப்பு, ஒளி, நிறம், நீர், நீர்நிலைகள், குடிநீர், குளிநீர், நிலம், உழவு, உணவு, பொருந்தா உணவுகள், அவற்றின் தொடர்ச்சி, உறக்கம் என்னும் 16 இயல்களும்.

இரண்டாம் பாகத்தில் ஆண்பெண் சேர்க்கை, இன்பமும் கருவும், மக்கட் பேறு, தாயின் மனநிலையும் கருவின் அமைப்பும், மகப்பேறும் மக வளர்ப்பும், கருவிலக்கு, நோய் இல்லா நீண்ட