உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

167

வாழ்க்கை, மனநிலையும் நீண்ட வாழ்க்கையும் என்னும் 8 இயல்களும் உள்ளன.

ஆய்வு முறை :

இந்நூற்பொருளை ஆராய்ந்த முறையைப் பற்றியும் அடிகளார் விளக்குகிறார். "இதில் சொல்லப்பட்ட பொருள் களையும் முறைகளையும் பற்றி யாம் ஓயாது ஆராய்ந்த படியாகவே இருந்தேம். நோய் வரா வகைகளையும் வந்த நோய் நீக்கு முறைகளையும் பற்றித் தமிழ் ஆங்கில வடமொழிகளிற் சான்றோர் எழுதிய உயர்ந்த நூல்கள் பலவற்றை யாம் பயின்றறிந்த அளவில்நில்லாது, அவை தம்மையெல்லாம் எம்மிடத்தே செய்து பார்த்தும் எம்மைச் சார்ந்தாரிடத்தே செய்து பார்த்தும் அவற்றுள் எவை மிகச் சிறந்தனவாய்ச் செலவல்லனவாய் எளிதிற் செய்து பயன் பெறத் தக்கன வாய்த் தெளியப்பட்டனவோ அவைகளை இந்நூலின்கண் வரைந்திருக் கின்றேம்" என்பது அது (முகவுரை -10)

“வாழ்க்கையின் மறைபொருள் நுட்பங்கள் முற்றும், நோய் நீக்கும் இயற்கை முறைகள் முற்றும் நன்கெடுத்து விளக்கும் இந்நூல் ஆண் பெண் பாலார் இரு திறத்தினர்க்கும் பெரிதும் பயன்பட்டு அவை நீடினிது வாழ்விக்கும்என்னும் நம்பிக்கை மிகுதியும் உடையேம்" என்று இந்நூற் பயனைக் கருதுகிறார் அடிகளார்.

நூறாண்டு வாழ்தல் :

நூறாண்டு வாழ்தல் என்பது அரிதன்று; இயல்பாகக் கூடுவதே என்பதற்கு சேம்சு ஈசுதன் என்பார் ஒருவர், நூறாண்டும் அதற்கு மேலும் உயிர் வாழ்ந்த ஆயிரத்து எழுநூற்றுப் பன்னிரண்டு பெரியார் பற்றி வரைந்த வரலாற்றைச் சுட்டுகிறார்.

-

132 24otor Bi, 162 2,6TB, 150 2,000 (Đ), 140 2,000 (Đ), 112 ஆ ஆண்டு,180 ஆண்டு என வாழ்ந்த பெருமக்களை எடுத்துக் காட்டுவதுடன், "நீண்ட நாள் உயிர் வாழ்வது எப்படி? என்பதைத் தம் வாழ்வியல் முறையோடு விளக்கிய பெருமக் களையும் சான்றுகளுடன் விளக்குகிறார் அடிகளார்."

ஆண்டு முதிர்ந்தமையால் உடம்பு தளர்ந்த நிலைக்கு வந்தாலும் அது பற்றி மனக்கிளர்ச்சி குறையாமல் இந்நூலில் நம்மாற் சொல்லப்படும் முறைகளை வழுவாது பின்பற்றி