உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

169

சிராசு உத்தெளலா என்பவன் ஆங்கிலரொடு பகை கொண்டு அவர்களுள் நூற்று நாற்பத்தாறு பேர்களைப் பிடித்துப்பதினெட்டடி நாற்பக்க அளவுள்ள ஓர் இருட்டறையில் ஒருநாள் இரவு சிறை வைத்து, மறுநாட் காலையில் பார்க்க இருபத்து மூன்று பேர் மட்டுமே கொத்துயிரும் கொலையு யிருமாய்க் கிடந்தார்கள்; மற்ற நூற்று இருபத்து மூன்று பேரும்பிணமாகக் கிடந்தனர் என்னும் வரலாற்றுச் சான்று காட்டி மூச்சுக் காற்றின் தூய்மை இன்றியமையாமையை விளக்குகிறார் (20)

மக்களின் மூச்சு ஓட்டத்தால் உண்டாகும் நச்சுக் காற்றானது பகற் பொழுதைக் காட்டிலும் இரவுப் பொழுதில் மிகுதியாகும் என்பதைப் "பகலவன் வெளிச்சம் உள்ள பகற்காலத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலான நிலையியற் பொருள்கள் நச்சுக் காற்றை உள்ளே இழுத்துத் தூய உயிர்க்காற்றை வெளியே விடுகின்றன; வெயில் வெளிச்சம் இல்லாத இராக்காலத்திலோ புற்பூண்டு முதலியன உயிர்க் காற்றை உள்ளிழுத்து நச்சுக் காற்றை வெளிவிடுகின்றன. விளக்குகிறார்.

என

மக்கள் உறங்கும் போது விளக்குகள் எரியுமானால் அவர்களது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றை அவை இழுத்துக் கொண்டு அவர்களுக்குத் தீமையை விளைக்கும் நச்சுக் காற்றை மேன்மேல் வெளிவிடுமாதலால் அதனை உள்ளிழுத்து அவர்கள் தமதுடம்பின் நலத்தை இழந்து போவார்கள். இதனாற் போலும் தலைமாட்டில் விளக்கை எரியவிடலாகாது என்று வீடுதோறும் வழங்கி வருகின்றார்கள், எனப் பழநாள் வழக்கின் நலத்தை விளக்குகிறார்.

நிலமானது

தடிப்பான பொருள்களையெல்லாம் தன்னிடத்தே இழுக்கும் தன்மை உடைமையினால் நச்சுக் காற்றானது எப்போதும்நிலமட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். உயிர்க்காற்றோ நொய்ய பொருளாகையால் நிலமட்டத்திற்கு மேல் உலவிக் கொண்டிருக்கும், இந்த ஏதுவினால் நிலத்தின்மேல் படுப்பதைக் காட்டிலும், கட்டிலின்மேற்படுப்பதே மிகவும் நல்லதாகும்.

மூச்சுப் பழக்கம் பற்றிச் சொல்லும் அடிகள் நூறு ஆண்டும் அதற்கு மேலும் உயிர் வாழது விரும்புகின்றவர்களுக்கு இந்த நூலிற் சொல்லப்படும் ஒவ்வொரு பொருளும் விலையிடுதற்கரிய மாணிக்கங்களாகவே தோன்றும். இந்த