உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

நூலில் எம்மால் எடுத்துச் சொல்லப்படும் பொருள்கள் எளிதிற் கிடைப்பன அல்ல; ஆகையால் நெடுங்காலம் உயிரோடு இருந்து பயன்பெற வேண்டும் நண்பர்கள் இவற்றை மனத்தின் கண் ஊன்றிப் பெறுதற்கரிய பெரும்பயனைப் பெறுவார்களாக! பின்னே சொல்லப்படும் பொருள் மிகவும் உன்னிற்கற்பால தொரு முழு மாணிக்கமாகும்; நன்றாக உற்றுணர்க என மூச்சுப் பழக்கம் பற்றி உரைக்கிறார்.

உயிர்க்காற்றுச் சிறிது நேரம் வலமூக்கில் ஓடிவரும்; அப்புறஞ் சிறிது நேரம் இடமூக்கில் ஓடி வரும். அப்புறம் ஒரு சிறிது நேரம் இரண்டு மூக்கிலும் ஓடி வரும். இங்ஙனம் மாறிமாறி ஓடி வருதலும், ஒப்ப ஓடி வருதலும் ஏன் என்று இதுவரையில் நீங்கள் ஆராய்ந்து பாராவிட்டாலும், இவ்வுண்மையை நாம் தெரிவித்த பிறகேனும் இஃது ஏதோ ஒரு பெரும்பயன் தருதற்காகவே இவ்வாறு ஓடி வருகின்றதென உங்கட்குத் தோன்ற வேண்டும் அல்லவா என அதனை ஆழமாக வினாவி விளக்கம் புரியும் அடிகள், அப்பயிற்சியை வாயளவில் அல்ல ஏட்டளவில் சொல்வாரல்லர்; தம் உடலையே ஆய்வுச் சாலையாகக் கொண்டு தாமே ஆய்வாளராக இருந்து நுணுகி ஆராய்ந்து அந்நுட்பங்களை உணராரும் உணர்ந்து பயன் கொள்ளும் வகையில் உயிர் வளர்க்கும் நெறியை உலகுக்கு வழங்குகிறார் என்பதை உணரலாம்.

மாறுதல் :

மாறுதலே உயிர் வாழ்க்கையாம்; அஃது இன்மையே மாய்வாம் என்னும் கொள்கையை உணர்த்தும் போது ஆய்வின் எளிமையும் அதன் முடிவின் அருமையும் தெளிவாகின்றதாம்.

உடலின் வலப்பாகத்தை ஞாயிற்று மண்டிலம் என்றும், இடப்பாகத்தைத் திங்கள் மண்டிலம் என்றும், வலமூக்கில் ஓடும் காற்று பகற்கலை என்றும் இடமூக்கில் ஓடும் காற்று மதிக்கலை என்றும், முன்னது வெப்புடையது பின்னது தட்புடையது என்றும், முன்னது விந்து என்றும், பின்னது நாதம் என்றும் (மின்னொளி, நிலவொளி) உடல் சிற்றுலகு என்றும், உடலுக்கு உறைவாம் நிலம் பேருலகு என்றும் விரித்துச் செல்லும் படிமான விளக்கம் அடிகளார் மூச்சுப் பழக்கச் சான்றாம்.

இரவின் பிற்பாகத்தில் கண்விழித் திருப்பார்க்கும், வேறு முயற்சிகள் செய்வார்க்கும் நோய் விலை கொடுத்து வாங்கினாற் போல வந்து சேரும் என்றும், விடியற் காலத்திற்கு முன்னமே கண்