உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

171

விழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவ்வெண்ணத்தை விட்டு இருபத் தொன்பது நாழிகைக்குப் பின் துயில் ஒழிந்து எழுவதே சிறந்த நலத்தைத் தருவதாகும் என உணர வேண்டும் என்கிறார்.

வெப்பம்: உயிர் உடம்பில் நிலைபெறுவதற்கு முதன்மை யான கருவி சூடே ஆகும் என்பதை நீராவி வண்டி, நீராவிக் கப்பல் ஆகியவை கொண்டு நிறுவுகிறார்.

உடம்பு நிலைபெறுவதற்குச் சூடு கருவியாவது போலவே, உடம்பு தோன்றுதற்கும், அழிதற்கும் கருவியாய் இருப்பதும் அதுவே என்கிறார். அடை கிடக்கும் கோழி, கருப்பையுள் இருக்கும் கரு, நிலத்துள் இட்டவித்து வை வெப்பத்தால் உடம்பு கொள்வதை விளக்குகிறார்.

சுரம் எனப்படும் காய்ச்சல்நச்சுப்பொருள்களை அழித்து நலம் செய்வதை எடுத்துரைக்கிறார். காய்ச்சலைத் தணிக்க உணவு உட்கொள்வதை நிறுத்துவதே நன் மருத்துவம் என்றும், உடலில் நச்சுத்தன்மை சேராமல் தூயதாக்கல் அக்காய்ச்சல் வராமல் தடுக்கும் முற்காப்பு என்றும் விரிவாக விளக்குகிறார்.

வெயிலுக்கும் குளிருக்கும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் பறவைகளையும் விலங்குகளையும் எடுத்து விளக்கும் வகையில் இயற்கை இறை உயிர்களைப் பாதுகாக்கும் பேரருளை விளக்குகிறார்.

கதிரோன் வெண்ணிறத்துள் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்களும் அடங்கி யிருத்தலை மெய்ப்பிக்க, இவ்வெழு வகைச் சாயங்களையும் அளவறிந்து சேர்த்துக் குழைத்தால் குழைத்தால் வெள்ளை வெள்ளை நிறமே வரக்கண்டு தெளியலாம் என்கிறார். கதிரவன் ஏழு நிறங்களையே ஏழு குதிரை என மறைத்துக் கூறினார் என்கிறார்.

பகலவன் ஒளியும் அவ்வொளியில் அடங்கிய நிறங்களுமே உலகத்தில் உள்ள எல்லா உயிர்களின் உடம்பின் வளர்ச்சிக்கும் கொழுவிய நிறங்களுக்கும் ஏதுவாக இருக்கின்றமையை விளக்குகிறார்.

நீர் : நீரைப் பற்றிப் பெரிதாக ஆராயும் அடிகளார், மழை நீரைப் பயன்படுத்தின் பிறநீரால் உண்டாகும் நோய்கள் இல்லாமல் வாழ முடியும் என்றும், அதனை மேற்கொள்வார் அரியர் எனினும் ஆய்வாளர் சொல்லுதல் கடமை என்றும் வலியுறுத்துகிறார்.