உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம்

ஒரு சொல் : ஓரியக்கம் :

228

இசைப்பாகாக வடித்த தந்தை முதலடியை மீண்டும் இசைத்து 'உற்ற தேகத்தை' என்று சொல்லிச் சற்றே தயங்கினார். தந்தை முகத்தை நோக்கினார் இளஞ் செல்வி ‘குறிப்பில் குறிப்பு உணர'வல்ல தந்தையார், "நீலா (இளங்குயிலின் பெயர் நீலாம்பிகை) வள்ளலார் பாடிய இவ் வளமான பாடலில் 'தேகம்' என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இது வடசொல்; இவ்விடத்தில் 'யாக்கை' என்னும் தென் சொல்லைப் பெய்திருந்தால் இன்னும் எத்தகு சுவையாகவும் நயமாகவும் இருந்திருக்கும்" என்றார்.

"அப்பா! வடசொல் தமிழில் புகுவதால் சுவையும் நயமும் குறையுமா அப்பா?"

"சுவையும் நயமும் குறைவது மட்டுமில்லை. வழக்கில் உள்ள தென் சொற்களும் படிப்படியாய் வழக்கில் இருந்து நீங்கிப்போகும். அதனால் காலவெள்ளத்தில் மறைந்து வழக்கற்ற சொற்களாகவும் போய்விடும். அவ்விடத்தில் வேண்டாத வேற்றுச் சொற்கள் புகுந்துவிடும். அதனால் வேண்டியதை இழப்பதுடன் வேண்டாததை ஏற்கும்படியான இருமடங்குக் கேடும் உண்டாகும்"

"அப்பா! அப்படியானால் நாம் வடமொழி முதலிய வேற்று மொழிச் சொற்கள் கலவாமல் பேசவும் எழுதவும் உறுதி கொள்ளலாமே! அது, நம் மொழிக்காவல் ஆகுமே!"

<<

"ஆம் குழந்தாய்! என்னுள் ஆழமாக அமிழ்ந்து கிடந்த செய்தி இது; உன் வழியாக வெளிப்படுகின்றது. நல்லது; இன்று முதல் நம் எழுத்திலும் பேச்சிலும் பிறமொழிக் கலப்பில்லாத கடைப்பிடி கொள்வோம்.' தந்தையும் மகளும் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவு இது. இதுவே 'தனித்தமிழ் இயக்கம்' தோன்றிய வரலாறு ஆகும்.

உறுப்பை வெட்டி ஓட்டல் :

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுலித்த தந்தையும், மகளும் தவத்திரு மறைமலையடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர். தோன்றிய இடம் மறைமலையடிகள் வாழ்ந்த வளமனையாய் இருந்து, இந்நாளில் 'மறைமலையடிகள் கலைமன்ற மாளிகை' யாய்த் திகழ்வதாகும். இது 'பல்லவ புரம்' ஆகிய பல்லாவரத்தில் உள்ளது. இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்பொழுது அடிகளார்க்கு அகவை நாற்பது.