உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

(FF)

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

அதற்குப் பலியிடுவது, தம்மில் வலிமை குறைந்தவர் களைக் கொள்ளையிட்டு, அரசனால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசனாகக் கருதிப் படைத்து அரசன் பகையைத் தேடிக் கொள்வது போன்றதாகும்.

சைவராய்ப் பிறந்தார் சிறுதெய்வ வணக்கத்தையும் உயிர்ப்பலியையும் விடுத்துப், பிறரும் விடுக்கும் பணி செய்வாராக"

·

என்பவற்றை விளக்கி வரைகிறார் - அறிவுரைக் கொத்து; கடவுள் நிலை.

66

‘கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா' என்பதையும் வலியுறுத்தி எழுதினார் அடிகள்:

உயிர்ப் பிறவி நோக்கு, அறியாமை நீக்கமும் அறிவுப் பேறு அடைதலுமாம்.

தவம் என்பது உயர்ந்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப் படுத்தி உறைத்து நிற்றல்.

கடவுள் என்பது உலகும் உயிரும் கடந்து நிற்பது. அது டம் காலம் பொருட்டன்மை கடந்து நிற்பதுமாம்.

என்பவற்றையும் விரிவுற விளக்கும் அடிகள்.

66

விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஓரிழிஞனால் வடமொழியில் கட்டப்பட்ட கதையே யானை வடிவில் பிள்ளையார் பிறந்தார் என்னும் கதை” என்று கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகளைத் துணிவுடன் கண்டிக்கிறார்.

இயற்கையொடு பொருந்திய புனைவே கதை நூலிலும் வேண்டும் என்பவர் அடிகள். சாகுந்தல நாடக ஆய்வால் வெளிப்படுத்துகிறார் : "இயற்கைக்கு முழுமாறான நிகழ்ச்சி களை ஆசிரியன் இந் நாடகக் கதை நிகழ்ச்சியின் நடுவே புகுத்தியிருப்பது இதனைப் பயில்வார்க்கு உண்டாம் இன்ப உணர்வினைச் சிதைப்பதாயிருக்கின்றது. சகுந்தலை துசியந்த மன்னனை முறையில் மணந்து கருக் கொண்டிருக்கும் செய்தி யினை வானின்கட் டோன்றிய ஒரு தெய்வ ஒலி, அவள் தந்தை காசிபருக்கு அறிவித்ததென்னும் புனைந்துரை, பயில்வார்க்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லை. அவருடன் தோழிமார் வாயிலாகவே அச்செய்தி அவரது செவிக்கு எட்டியிருக்க