உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

189

வேண்டும். இச்சிறு நிகழ்ச்சிக்கு ஒரு தெய்வ ஒலியினைக் கொணர்ந்து மாட்டியது நாகரிக அறிவின்பாற் பட்டதாய் ல்லை" என்கிறார். இத்தகைய நோக்கினராகிய அடிகளார் சிவனியப் புராணங்களையும் ஆழமாக ஆய்ந்து கருத்துக் கூறுகிறார் :

புராணங்கள் என்பன, உயர்ந்த அறிவில்லாப் பொது மக்கட்கு (இறைவன் வரம்பிலா ஆற்றலையும் அடியாரைக் காக்கும் அருட்டிறங்களையும்) உணர்த்துதல் வேண்டி இரக்கமுள்ள சான்றோரால் கட்டி வைக்கப்பட்ட பழைய கதைகளையுடையனவாகும் (உரைமணிக் கோவை 147)

"பின்னே முழுமுதற் கடவுளை மக்கள் நிலைக்குத் தாழ்த்தியும் தாம் வணங்கத் துவங்கிய மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியும் கடவுள் நிலைக்கு மாறான பல கட்டுக் கதைகளைக் காலங்கள் தோறும் புதிய புதியவாய் உண்டாக்கி அவைகளையும் புராணங்கள் என்னும் பெயரால் வழங்க விட்டனர்" என்கிறார் (மேற்படி 148)

வீரபத்திரரும் பிட்சாடணரும் இறைவன் உருவினர் அல்லர் என்கிறார்.

"கந்தபுராணத்திலும் பரிபாடலிலும் காணப்படும் முருகப் பெருமானைப் பற்றிய கதை முருகப் பெருமான் பற்றியதன்று; ஒரு தமிழ் மன்னன் மற்றொரு தமிழ் மன்னனைக் கொன்ற கதையாகும்" என்கிறார் (மறைமலையடிகள் அரசு 131-2) அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் போன்றவை இடைச் செருகல் என ஒதுக்குகிறார். பெரியபுராணத்தையும் ஆய்கின்றார் அடிகள் :

1.

2.

3.

4.

திருமுகப் பாசுரம் பெற்றவர் சுந்தரர் காலத்தில் இருந்த சேரமான் பெருமாள் நாயனார் அல்லர்.

பலகை விடுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன்று.

சுந்தரர்க்கும் பரவையார்க்கும் சங்கிலியார்க்கும் நடந்த திருமணங்கள் கயிலாயப் பூங்காவில் கண்ட காட்சியின் விளைவு என்பது பொருந்தாது.

பெரிய புராணத்தில் பல இடைச் செருகல்கள் உண்டு என்பவை அவை (மேற்படி 130)