உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இறைமை :

t

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

"கடவுள் ஒருவரே' என்பதும், 'அவர் எவ்வாற்றானும் ஊனுடல் தாங்கி மனிதராகப் பிறவார்" என்பதும் அடிகளார் கண்ட முடிந்த முடிவாகும். (மறைமலையடிகள் வரலாறு, 649) 'காலைக் கதிர் முருகு; மாலைக் கதிர் சிவம்" எனவும் காண்கிறார் (தமிழர் மதம்).

உயிரியல் :

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் பெரு நெறியாளராகிய அடிகள் தம் நூல்கள் உரைகளிலும் பயில வழங்கியுள்ள சாதி வேறுபாட்டு ஒழிப்பு, சாதி வேறுபாட்டுத் தீமை என்பவற்றைத் தொகுத்துப் பார்ப்பின் அதுவே ஒரு பெரு நூலாகும் அளவு விரிவினதாம்.

சாதிப் பிரிவுக் கேடு

CC

“காதற் காமம் காமத்துச் சிறந்தது" என்னும் தொல்காப்பிய வாழ்வியல் வாய்மையை விளக்கும் அடிகள், "இக்காதல் மாட்சி இந்நாள் இயல்கின்றதா? இல்லை! இல்லை! சிறிதுமே இல்லை!' என்று விளக்குகிறார் :

சாதி வேற்றுமை என்னும் தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது. காதல் அன்பிற் சிறந்து மறுவற்ற மதிபோல் விளங்கத் தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலைகுலைத்து அதனைப் பழிபாவங்களால் மூடிவிட்டது. எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட டம் பெறுகின்றனளா? எள்ளளவும் இல்லையே ஏன்?

ஒரு சாதிக்குள்ளேதான், ஒருபது வீடுகளேயுள்ள ஓர் னத்திலேதான் அவள் ஒருவனை மணக்க வேண்டும். அவள் கயல்மீனை ஒத்த கண்ணழகியாய் இருந்தால் என்ன! கண் குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் முத்துக் கோத்தாலன்ன பல்லழகியாய் இருந்தால் என்ன! தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க் கிழவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும்.

அவள் பலகலை கற்றுக் கல்வி அறிவிலும் இசைபாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் சிறந்த