உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

29

கழிப்பார் என்றுதான் இலர்? அதனால் சோமசுந்தரக் காஞ்சியில் சொல்வழு, பொருள்வழு, இலக்கண வழு இன்ன இன்ன எனக் கூறுவார் கிளர்ந்தனர். அவற்றுக்கு அஞ்சி ஒடுங்குவரோ அடிகள்! 'முருகவேள்' பெயரால் இளந்தையிலேயே பெரும் புலவர்கள் கருத்துகளைப் பிழையென்றால் பிழையென்று வீறிநின்ற 'நக்கீரர்' அல்லரோ அவர். அதனால் அழுக்காற்றால் சுட்டிக்காட்டிய புலவர் கூற்றுகளையெல்லாம், சூறையில் சுழலும் சருகெனச் சுழற்றி எறிந்து 'சோமசுந்தரக் காஞ்சி யாக்கம்' என்னும் பெரியதொரு நூலை வரைந்தார். எதிர்ப்பு அமைந்தது; அடங்கியது; அப்பொழுது அடிகளார் அகவை 26; ஆண்டு 1902 ஆகும்.

அறிவுக் கடல் :

அதே 1902 இல் 'ஞானசாகரம்' என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். அடிகளார் தனித்தமிழ் உணர்வு கொண்ட பின்னர் அது 'அறிவுக்கடல்' ஆயிற்று.

பெயர்

ஞானசாகரம் என

வைக்கப்பட்டாலும்,

அப்பொழுதே அடிகளார் தமிழ் வடமொழி வேறுபாட்டை அறிந்தே இருந்தார் என்பதை அதன் முதல் இதழே வெளிப் படுத்துகிறது. "தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா?” என்பதொரு கட்டுரையும், "தமிழ் மிகப் பழையதொரு மொழி" என்பதொரு கட்டுரையும் அதில் உள்ளன. சொல்லாய் விலும், தொல்காப்பிய ஆய்விலும் அடிகளார் கொண்டிருந்த ஈடுபாடு “தமிழ்ச்சொல் உற்பத்தி”, “தொல்காப்பிய பரிசீலனம்", "தொல்காப்பிய முழுத் தன்மை" ஆகிய கட்டுரைகளால் விளங்கும். இவ்விதழ் வழியாக வெளிவந்த நூல்களில் பெரியதும் அரியதும் ஆகியது "மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் " என்பதாகும்.

"நமக்குப்பின் நாம் நடத்திய சைவசித்தாந்த விளக்கத்தையே நீயே நடத்துக" என்று நாயகர், தம் இறுதி நாளில் அடிகளாரிடம் கூறியிருந்தார். அதனை ஒப்பிய அடிகளார் அப் பணியைக் கல்லூரி விடுமுறை நாள்களில் எல்லாம் சிறப்பாகச் செய்தார். அருட்பா மருட்பாப் போர் :

-

NE

அந்நாளில் "அருட்பா மருட்பாப்" போர் நிகழ்ந்தது. வள்ளலார் பாடிய பாக்கள் அருட்பாக்கள் அல்ல; மருட் பாக்களே" என்பது போரின் ஊடகம். ஒருபால் வள்ளலார் கூட்டம்; மற்றொருபால் ஆறுமுக நாவலர் கூட்டம்.