உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

இக்கூட்டத்துள் வள்ளலார் வழிக் கூட்டம் மறைமலையடிகளை அரணாகப் பற்றியது. நாவலர் வழிக் கூட்டத்தின் நாயகராகப் பெரும்புலவர் கதிரை வேலர் விளங்கினார். அவர் அந்நாளில் சென்னை வெசுலி கல்லூரியில் தமிழ்ப்பணி புரிந்தார். அவர்தம் மாணவராக விளங்கியவர் திரு.வி.க.

அடிகளார்க்கும் கதிரைவேலர்க்கும் தனிப்பட்ட வெறுப்போ காழ்ப்போ உண்டோ? இல்லை! அடிகளார் தம் 1-8-1903 நாட்குறிப்பில், "கதிரைவேற்பிள்ளை என் வீடு வந்து எனக்குத் டு தங்கள் கல்லூரியில் வேலை வாங்கித் தரவேண்டும் என்றார். நான் "உங்கள்பால் எனக்குச் சினமில்லை. அப்படியே செய்வேன் என்றேன்" என்று குறித்துள்ளமை அவர்கள் தனித் தொடர்பைக் குறிக்கும்! ஆனால் அருட்பாவைப் பற்றிய போரில் எதிர் எதிராக நின்றனர்.

வள்ளலார் பாடிய பாடல்கள் 'அருட்பாவா மருட்பாவா என்பதை முடிவு செய்வதற்கு, ஒரு பொது ஏற்பாடு செய்யப்பட்டது. அடிகளார் அருட்பாவின் பக்கலிலும் கதிரைவேலர் மருட்பாவின் பக்கலிலும் முறையுரைக்க முடிவு செய்தனர். முறைமன்ற நடுவர் ஒருவரும் அறிஞர் பெருமக்களும் பொதுமக்களும் 20-9-1903 ஆம் நாள் சிந்தாதிரிப்பேட்டையில் கூடினர். அடிகளார்,

வள்ளலார் பாக்கள் அருட்பாக்களே' என முன்வைத்து இசைத்துப் பாடியும் கருத்துநலம் கொழிக்கப் பேசியும் அமர்ந்தார்.

கதிரைவேலர் கொண்டலென முழங்க வல்லார். எனினும் அப்பொழுது கொண்ட கருத்தை விடுத்து வள்ளலாரைப் பழிப்பதே குறியாகிப் பொழிந்தார். தலைவர் உரை அடிகளார் உரையைச் சார்ந்து நின்றது! 'அருட்பாவே' என்னும் கருத்தே, அவையில் பொலிந்தும் விளங்கிற்று!

ஆனால், மறுநாள் ஓர் இதழில், கதிரைவேலர் தம் பக்கமே வெற்றி என ஓர் அறிக்கை விடுத்தார். அதனால் மீண்டும் அதே மேடையில் அவரவர் கருத்தை மீண்டும் நிலைநாட்டிப் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு இடை நின்றோர் ஏற்பாடு செய்தனர். அதன்படி 27-9-1903 ஆம் நாள் அவ் ஆய்வு நிகழ அடிகளார் மட்டுமே வந்தார்; கதிரைவேலர் வந்திலர். அடிகளார் அருட்பாச் சிறப்பினை வந்தோர் மனங்கொள எடுத்துரைத்து, 'அருட்பாவே' என உறுதிப்படுத்தினார். பின்னர் 18-10-1903இல் சென்னை வேணுகோபால் அரங்கில் 'வழக்குரை காதை'