உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

31

தொடர்வதாய் இருந்தது அன்றும், அடிகள் மட்டுமே மேடைக்கு வந்தார்; பொழிந்தார். 'அருட்பா வென்றது' என அவை பெருமுழக்கம் செய்தது! அவ் எதிராட்டு முடிந்தது எனப் பெருமக்கள் முடிவு செய்தனர். ஆயினும் "அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை" என்பது போல், ஈராண்டுகள் கழித்தும் காஞ்சியிலும் திருச்சியிலும் கதிரைவேலர் மருட்பாக் கிளர்ச்சியைத் தூண்டினார். ஆங்கும் அடிகளார் முறையே 27- 2-1905, 1-7-1905 ஆகிய நாள்களில் சென்று மறுப்புரை பகர்ந்தமை பின்வரலாறாகும்.

சைவசித்தாந்த சமாசம் :

சிவநெறிப் பரப்பலுக்கு ஓர் அமைப்பை உருவாக்க அடிகள் விரும்பினார். அவ்விருப்பம் 7-7-1905 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் முன்னர்ச் சைவ சித்தாந்த சமாசம்' என்னும் பெயரால் தோன்றியது. அடிகள், அதன் தலைமைச் செயலாளர். நாகை மதுரை நாயகம், வேலூர் அ. சிதம்பரம், கீழ்வேளூர் வி.சி. இராமலிங்கர் முதலியவர்கள் உறுப்பினர். நாட்டில் சிவநெறி சார்ந்து விளங்கிய அமைப்புகளும், புதியனவுமாகக் கிளைகள் பல தோற்றமுற்றன.

சமாசத்தின் முதல் ஆண்டுவிழா 26-12-1906 ஆம் நாளிலும், இரண்டாம் ஆண்டுவிழா 1907 திசம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களிலும் சிதம்பரத்தில் நிகழ்ந்தன. இவ் விழாக்களுக்கு முறையே இலங்கை சர்பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும், மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பொன்.பாண்டித்துரை அவர்களும் தலைமை தாங்கினர். மூன்றாம் ஆண்டுவிழா நாகை வெளிப்பாளையத்தில் 1906 திசம்பர் 25, 26, 27 ஆம் நாள்களில் செ.எம்.நல்ல சாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. நான்காம் ஆண்டுவிழா 1909 திசம்பரில் இலங்கை சர்.ஏ. கனகசபை அவர்கள் தலைமையில் திருச்சியில் நிகழ்ந்தது. 1910 ஆம் ஆண்டு முதலே அடிகள் சமாசப் பிணைப்பில் இருந்து விலகித் தாம் விரும்பிய வண்ணம் சமயப் பணியும் பொதுப் பணியும் ஆற்றலானார். சமாசத்தில் உண்டாகிய சில உட்பூசல்கள் அடிகளாருக்குப் பிடியாமையாலேயே இந்நிலை உண்டாயிற்று. எனினும், அவ்வப்போது சமாச விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு தலைமை தாங்கிப் பேருரையாற்றியுள்ளார்.

அடிகள்

13

ஆண்டுகள்

கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றினார். அக் காலத்தில் அண்ணாப்பிள்ளைத்தெரு,