உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

35

புலமை நலத்தை மதுரை நான்காம் தமிழ்ச் சங்க நிறுவனர். பொன். பாண்டித்துரையார் அறிந்தார். அதனால் அடிகளாரைத் தமிழ்ச்சங்க விழாக்களுக்கு அழைத்தார்.

மூன்றாம் ஆண்டுவிழாவில் (24-5-1904) சீரிய பொழிவாற்றி அடிகளார், அனைவரையும் கொள்ளை கொண்டார்; அவர்தம் தோற்றமும் பொழிவும் கவர்ச்சி மிக்கனவாக வயப்படுத்தின.

அடுத்த ஆண்டும் நான்காம் விழாவுக்கு அடிகள்

அழைக்கப்பட்டார். அது 24-5-1905 இல் நிகழ்ந்தது. தலைமை தாங்கிய வி.கனகசபையார் "தொல்காப்பியர் பிராமணர்;" என்று கூறி அதனால் தமிழர் ஆரியர்க்குக் கடமைப்பட்டவர் என்று வலியுறுத்தினார். மேலே அடிகளைப் பேசுமாறு பாண்டித் துரையார் அழைத்தார். அடிகளார் "தமிழர் நாகரிகப் பழமை, சிறப்பு ஆகியவற்றை விரித்துரைத்து ஆரிய நாகரிகத்திற்கும் பிராமணர்க்கும் தமிழர் கடப்பட்டிருக்க வில்லை என வலியுறுத்தினார். பாண்டித்துரையாரும் அவையோரும் அடிகள் கருத்தை மிக வரவேற்றனர். (25-5-1905) அடிகள் பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்பதோர் அரிய உரையை ஆற்றினார் அதனைக் கேட்ட புலவர்கள் பலர் மகிழ்வுற்று அடிகளைப் பாராட்டிப் பாமாலை சூட்டினர்.

""

ஐந்தாம் விழாவுக்கும் அடிகள் சென்றார். 26-5-1906 இல் உ. வே. சாமிநாதர் தலைமையில் நிகழ்ந்த மூன்றாம் நாள் விழாவில் 'பட்டினப்பாலை'யின் புத்துரை பற்றிப் பேசினார். தலைவர் "சொற்பொழிவின்பத்தில் மூழ்கிவிட்டேன்; அவர்

னிய பேச்சொலிகள் என் இரண்டு காதுகளிலும் இன்ப முழக்கம் செய்கின்றன; என்ன பேசுவதென்று தெரியவில்லை" என்று அமைந்தார். பின்னர் ஒருமுறை 24-5-1908 இல் 'தமிழர் நாகரிகம்' பற்றியும் 25-5-1908 இல் குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி ' பற்றியும் 26-5-1908 இல் தாம் இறையன்பு பற்றி ஆங்கிலத்தில் இயற்றிய பாடல்கள் குறித்தும் பொழிந்தார். எனினும் தமிழரல்லாதார் போக்கும் அவரைத் தழுவிய தமிழ்ப் புலவர் போக்கும் அடிகளார் உள்ளத்தை வருத்தின. பின்னர்த் தாம் தனித்து நின்று தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் சமயம் என்பன பற்றிச் செய்ய வேண்டியிருந்த அரும்பெருங் கடமைகளை உணர்ந்து அவற்றில் பெரிதும் கிளர்ந்தார்! சங்கத் தொடர்பு அவ்வளவில் அமைந்தது.