உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாழ்வு :

தமிழ் மலை

41

அடிகளார் நடத்திய இல்வாழ்வியல் குறித்தும், சாந்தா அம்மையார் அன்பியல் குறித்தும் அவர்கள் அருமைத் திருமகனார் மறை திருநாவுக்கரசர் வரைந்துள்ளார்.

அடிகளார் எதனைச் சொன்னாலும் நம்பி அப்படியே ஏற்றுக்கொள்ளும் 'ஆமாம் சாமி'யாக அம்மையார் இருந்தார் என்றும், அம்மையார் உடன்பாடு இன்றி அடிகள் எதுவும் செய்யார் என்றும் கூறுகிறார்.

"அடிகள் மனம் விட்டுப்பேசக்கூடிய ஒரே நண்பரும் சாந்தம்மாதான். சாந்தா! இன்று மாணிக்கவாசகர் காலம் ழுதினேன். தஞ்சாவூர் சீனிவாச பிள்ளை அவரைப் பத்தாம் நூற்றாண்டு என்றார். நான் மூன்றாம் நூற்றாண்டு என்று முடிவு கட்டியிருக்கிறேன். நல்ல சான்றுகள் கிடைத்துள்ளன.

"வெள்ளைக்கார நாட்டில் மில்டன் என்பவர் நல்ல பாட்டுகள் பாடியிருக்கிறார். நிரம்ப நன்றாய் இருக்கிறது”

செடி

சாகுந்தல நாடகத்தில் சகுந்தலைக்குச் களிடத்தும் மான் முதலிய உயிர்களிடத்தும் உள்ள அன்பைக் காளிதாசர் நன்றாகச் சொல்கின்றார்.'

'பிள்ளா! இன்று பறவைகளின் வாழ்க்கை பற்றி ஒரு வெள்ளைக்காரர் எழுதியதைப் படித்தேன். எவ்வளவு ஆராய்ந்து எழுதியிருக்கிறார் தெரியுமா?"

"தோட்டக்காரனுக்கு

கொடுக்கலாம்?"

எவ்வளவு

சம்பளம்

"கொழும்பில் இருந்து என்னைப் பேசவருமாறு அழைக்கிறார்கள். போகட்டுமா? வருகிறேன் என்று எழுதட்டுமா?'

அறிதுயில் என்னும் நூலை எழுதிவிட்டேன். 300 பக்கம் உண்டு. மூன்று ரூபா விலை வைக்கட்டுமா?

"அச்சுக்கூடத்து இராசு நாலணா கேட்கிறான் கொடுக்கட்டுமா?

முன்பணம்

"இன்று தேங்காய்ப்பால் குழம்பு வை. இன்றைக்கு நூல் விற்ற பணம் 6-ரூ வந்தது. இன்று ஐந்து வந்தது. இன்று ஒன்றும் இல்லை."