உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

145

தமிழன் நாய்போல் நடத்தப்படுவது இவ்விருபதாம் நூற்றாண் டிலும் தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவனல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.

பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ் வேறிடத்தில் உண்டி படைக்கப்படினும் ஒரே நேரத்தில் படைக்கப் பட்டிருப்பின் ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப்பொது உண்டிச் சாலைகளில் பிராமணரின் எச் சிலிலைகளில் இருந்து கறிவகைகளை எடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமாய் இருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமையாயின், லவசமாய் உண்ணும் டத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!

மடம் துறவியர்பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப்படுவன கொண்முடிபும் மெய்ப் பொருளியலும். முப்பத்து ஆறென்று கொள்ளப்படும் மெய்ப்பொருள்களுள் குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின் ஏனைநாடுகளில் ஏன் அஃதில்லை? ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலரே சொல்ல வில்லையா?”

இவை தமிழ்த் துறவோர்நிலை விளக்கங்கள்.

"ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரூரில் ஒரு நெடுஞ் சாலையைச் சற்றுமறித்துக் கொண்டிருந்த ஒரு நூறாட்டை வேப்பமரத்தை வெட்டி விடும்படி உத்தரவாயிற்று. அதிற் பேயிருக்கிறதென்று ஒருவரும் வெட்ட முன்வரவில்லை. கூலி அதிகமாகத் தருவதாகச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதன் மேல் துணிந்து வந்த இரண்டொருவரும், கோடரியால் ஒருவெட்டு வெட்டினவுடன் பின் வாங்கிக்காய்ச்சல்கண்டு வீட்டிற் படுத்துக் கொண்டனர். அதன்பின் அச்சம் அதிகரித்தது. கூலியை எத்துணை உயர்த்தினும் வெட்ட ஒருவரும் இசைய வில்லை. அதன்பின் திருச்சித்தண்டலாளரான ஆங்கிலத்துரை, ஓர் 24மணிநேர வெளியேற்றக் கட்டளைச் சீட்டில்தாம்கையெழுத் திட்டு அம்மரத்தில் ஒட்டச் சொல்லி விட்டு, மறுநாள் தாமே சில வேலைக் காரரைக் கொண்டு வந்து வெட்டச் சொன்னார். மரம் விரைந்து வெட்டப்பட்டது. ஒருவருக்கும் ஒன்றும் நேரவில்லை." இது அச்சத்தினாலேயே பல பேய்கள் படைத்துக் கொள்ளப்படும் உண்மையைத் தெரிவிக்கப் பாவாணர் கூறும் சான்றுகளுள்ஒன்று.