உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஆராய்ச்சியாளர் அவலநிலை குறித்துப்பாவாணர் கூட்டும் ஒரு கட்டுரைப் பகுதி:

முப்பதாண்டுகட்கு முன்னே ஒரு பெரும் புலவர் வடை என்னும் சொற்கு வடு என்பது வேர் என்றார்.

இக்காலத்தில் ஒரு பேராசிரியர் காரன் காரி என்னும் ஈறுகள் வடசொற்கள் என்றெழுதுகின்றார்.

மற்றொருவர், குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (1568) "முடியலாகா அவ் வழக்குண்மையின், கடியலாகா கடனறிந் தோர்க்கே' என்று தமிழ்ச்சொற்குக் கூறியதைப் பிறமொழிச்சொற்கும் கூறியதாகப் பிறழ உணர்ந்து சைக்கிள், மோட்டார்,பசு (Bus) ரேடியோ முதலிய சொற்களையும் தமிழில் தழுவலாம் என்கிறார்.

இன்னுமொருவர், இந்தியால் தமிழ்கெட விருப்பதை, 'பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகை யினானே' என்னும் நன்னூல் நூற்பாவால் (462) அமைக்கின்றார் என்கிறார்.

தமிழ்ப்பாவை 7 ஆம் ஆண்டு மலர்; கருப்பும் கறுப்பும். ஈ.வே.இரா.பெரியாருக்குப் பாவாணர் விடுக்கும் வெளிப்படை வேண்டுகோள் :

தமிழ்நாட்டுத் தந்தை ஈ.வே. இரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது; வேண்டுகோள் அன்பார்ந்த ஐயா,

வணக்கம்,

தாங்கள் இதுவரை அரைநூற்றாண்டாகக் குமுகாய (சமுதாய)த் துறையிலும் மதத்துறையிலும் தமிழ் நாட்டிற்குச் செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின், மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒருநாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.