உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

147

ஆதலால், தங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க் காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகின்றேன்.

திட்டம்

தமிழையும் அதன் வழிப்பட்ட மலையாளம், கன்னடம், தெலுங்கு, குடகு, துளு, கோத்தம், தோடம், கோலாமி, நாய்க்கி, பர்சி,கடபா, கோண்டி, கொண்டா, கூய், குவீ, குருக்கு, மாலத்தோ, பிராகுவீ என்னும் பதினெண் திரவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பித்தல்.

மதம் கற்பிக்கப் படாது. கடவுள் வாழ்த்துப் பாடப்பெறாது. அதற்கீடாகப் பெரியார்வாழ்த்து அல்லது புகழே பாடப்படும். கல்லூரிநடப்பிற்குரிய சட்டதிட்டங்களைத் தாங்களே அமைத்துத்

தரலாம்.

ஆசிரியர் குழு

முதல்வர்: பேரா. தி.வை. சொக்கப்பா எம்.ஏ., எல்.தி., தமிழ்ப்பேராசிரியர்: ஞா. தேவநேயன்.

துணைவர் : தமிழ் மறவர்வை. பொன்னம்பலனார்த. பிறமொழிகட்குத் தகுந்த ஆசிரியர் விளம்பரம் செய்து அமர்த்தப் பெறுவர்.

மாணவர்

பள்ளியிறுதி அல்லது அதற்குச் சமமான தேர்வு முதல் வகுப்பில் தேறிய ஐம்பதின்மர் குலமத கட்சியின நாடு வேறு பாடின்றித் தெரிந்தெடுக்கப்பெறுவர்.

வெளியூர் மாணவர்க்கும் வெளிநாட்டு மாணவர்க்கும்

உண்ணவும் தங்கவும் விடுதியிருக்கும்.

கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் பின்னர்த் தெரிவிக்கப்படும்.