உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பெருந்துருத்தியார்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சேலத்தில் ஒரு பாடகர் (பாகவதர்) இருந்தார். அவர் பெயர் 'லம்போதர' பாகவதர் என்பது. லம்போதரர் என்பது பிள்ளையார் பெயர்களுள் ஒன்று. பெருவயிறர் என்பது (லம்போ உதரர்) பொருள். மத்தள வயிறன் என்பார் அருணகிரியார். பாவாணர் லம்போதரரைத் தமிழ்ப்பெயரிட்டு வழங்கினார். அது 'பெருந் துருத்தியார்' என்பது. பெருந்துருத் தியாரே வாரும்; பெருந் துருத்தியாரே இன்னபாடல் பாடும் என்றே கூறுவார். அவர் பெயர் தமிழில் பெருந்துருத்தி யாராக நிலைத்தது! இதனைச் சேலம் நாகரத்தின ஓதுவார் உரைத்தார். தாம் உடனிருந்த காலத்து நிகழ்வெனச் சுட்டினார்.

கடுஞ்சறுக்கல்கள்

பா.வே. மாணிக்கரின் மூத்தார் பா. வே. பொன்னுசாமி, அவர் திருக்குறள் இராமாயணம் ஆகியவற்றில் பெருந் தேர்ச்சியர். சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமியார், பொன்னுசாமி, பாவாணர் ஆகிய மூவரும் தமிழ் நிகழ்ச்சிகளில் எல்லாம் கட்டாயம் இணைந்திருப்பர். பொன்னுசாமியார் தலைமையில் பாவாணர் 'பரிமேலழகரின் கடுஞ்சறுக்கல்கள்' எனப் பேசினார். பேசி அமர்ந்ததும் பொன்னுசாமியார் தம் முடிப்புரையில், "பரிமேலழகரின் கடுஞ்சறுக்கல் என்னும் பொழிவு வழியே பாவாணரின் கடுஞ்சறுக்கல்களையே கண்டோம்" என்று ஒவ்வொன்றாக மறுத்து விளக்கினார். ஒவ்வொரு மறுப்பைக் கேட்டும் பாவாணர் நகைத்தமை - எவரையோ மறுத்துரைப்பதாக எண்ணி நகைத்தமை போலிருந்ததேயன்றித் தம்மை மறுத் துரைத்ததாகக் கருதவே இல்லை என்றார் நாகரத்தின ஓதுவார். கணியரைக்கேட்க

சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்களும், நகரவைத் தலைவர் இரத்தினசாமி அவர்களும் மிகச் செல்வாக் குடையவர்: பெரியாரின் தன்மானக் கொள்கையில் தலைநின்றவர். எனினும் எதிர்ப்பாளர் சிலர் இருத்தல் நடைமுறை தானே! கல்லூரிச் சுற்றுச் சுவரிலே சில தொடர்கள் முதல்வரையும் தலைவரையும் பற்றிப் பழிப்பாக எழுதப் பட்டிருந்தன. அதனைக் கண்ட முதல்வர் அதன்முன் 'கண்டும் கேட்டும்' அறியாது அதனைக் கண்டு வருந்தினார். 'யார் செய்திருப்பார்?' எனத்