உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

திகைத்தார்; பலரைச் சூழ்ந்தார்.

167

பாவாணர், முதல்வர்

சூழ்நிலையை அறிந்து வருந்தியிருக்கத் தானே வேண்டும்! அந்நிலையிலும் அவர் குழந்தையாகவே இருந்தார்! என்த இடத்தில் எது சொல்ல வேண்டும் என்று தெரியாமல் உரையாடும் குழந்தையாகவே இருந்தார். இராமசாமியார்க்குக் கணியத்தில் மிகுந்த நம்பிக்கை யுண்டு; கணியை நாடித் தேடிப் பார்க்கும் வழக்கமும் உண்டு. அதனை அறிந்திருந்த பாவாணர், வரா அவரா என ஏன் ஐயுற வேண்டும்? கணியனைப் போய்ப்பார்த்தால் அவன் கண்டு காட்டிக் கொடுத்து விடுவானே" என்று நகைப்ேேபாடு கூறினார். பாவாணக் குழந்தையின் நகைப்போடு தாமும் நகைத்தாரேயன்றி உளம் வருந்தினார் அல்லர் இராமசாமியார். ஏனெனில், பாவாணரைப் புரிந்து கொண்டவர் அவர்.

CC

கழுத்தறுப்பு

பாவாணரின் வகுப்புத் தேர்வுத்தாள் கட்டுகளை எடுத்துத் திருத்தித் தருமாறு கூறினார் முதல்வர் இராமசாமியார். "என்ன இந்தக் கட்டுகளைத் திருத்தவா? ஈரத் துணியைக் கழுத்தில் போட்டு அறுத்து விடலாமே இதற்கு!" என்று சட்டென மறுமொழி தந்தாராம் பாவாணர். அவர் வகுப்புத்தாள்! திருத்த வேண்டிய கடமை அவர்க்கே உண்டு! எனினும், இவ்வாறு மறுமொழி சொல்பவர்க்கு என்ன சொல்வது? பாவாணர் விந்தை மனிதர் என்பதைப் புரிந்துகொண்ட அவர் வேறொருவரிடம் கட்டுகளைத் தந்து மதிப்பிடச் செய்தார். இவற்றைத் தம் உரையாட்டிடையே சிலம்பொலி செல்லப்ப னார் (5-5-89) உரைத்தார்.

என்வாழ்வில் பசுஞ்சோலையாக இருந்தது சேலங் கல்லூரியில் பணிசெய்த பன்னீரியாண்டே" என்னும் பாவாணர், இராமசாமியாரை நினைந்து உருகுகிறார்; எழுதுகிறார்; பதிகம் பாடுகிறார்; அவர் வரலாற்றை நன்றிக் கடப்பாடு கருதியேனும் எழுதியாக வேண்டும் என்கிறார்.

இவர் சொன்னார் அதனால் வந்தேன்

பாவாணர்க்கு, அரசின்சார்பில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்கம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப் பட்டது. அதனைக் கொண்டுவந்து தமிழ் வளர்ச்சித் துறை