உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வண்ணம்

நான்

சிலம்பொலி செல்லப்பனாரைக் கண்டார் பாவாணர். "நாம் விரும்பிய ஆணை வந்து விட்டது, பதவியேற்கிறேன் என்று முதல்வரிடம் ஒருசொல் சொல்லி விட்டு வந்து விடலாம். தங்கள் பணியமர்வுச் செய்தி அவர்க்கு மகிழ்வாகவும் இருக்கும். நம் நல்லெண்ண வெளிப்பாடாகவும் இருக்கும்" என்றார் செல்லப்பனார். "நான் முதல்வரைப் பார்த்துச் சொல்லவேண்டுமா? நீங்கள் சொல்கிறீர்கள். அதனால் பார்த்து விடலாம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்றார் பாவாணர். "ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டாம். குறளகத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள் நானே அழைத்துப்போகிறேன்.” என்றார் செல்லப்பனார்.

மறுநாள் குறித்த நேரத்தில் பாவாணர் குறளகத்திற்கு வர, அவரை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் சந்தனமாலை ஒன்று வாங்கினார் செல்லப்பனார். "ஏன் முளரி (ரோசா) மாலை வாங்கியிருக்கலாமே?" என்றார் பாவாணர். வாங்கலாம்; இன்று முதல்வரைப் பார்க்க வாய்ப்பில்லாது போயினும், நாளையும் இம்மாலை பயன்படும்; முளரி மாலை பயன் படாதே. அதனால் தான்" என்றார் செல்லப்பனார். "அப்படியா! இது நல்ல ஏற்பாடு தான்" என்று நகைத்தார் பாவாணர். முதல்வரைக் கண்டனர். செல்லப்பனார் பாவாணரிடம் மாலையைத் தந்து முதல்வர்க்குப் போடச் சொல்லியிருக்கிறார். அப்படியே சார்த்தி விட்டு இருக்கையில் தலை குனிந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்டார் பாவாணர். என்ன செய்தி என வினாவினார் முதல்வர்."அகர முதலிப்பணியை ஏற்பதை முன்னிட்டுப் பார்த்துப் போகலாம் என வந்திருக்கிறார்" என்றார் செல்லப்பனார்."இவர் பார்த்து விட்டு வந்து விடலாம் என்றார்; அதனால் வந்தேன் நல்லது; வருகிறேன்" என்று புறப்பட்டு விட்டார் பாவாணர்! இவர்தாம் பாவாணர்! இம்முதல்வர், கலைஞர்! இதனை உரைத்தவர் செல்லப்பனார்.

அவர் உரையாடட்டும்

வள்ளுவர் கோட்டத்திலே ஒருவிழா; திருவள்ளுவர் திருநாள்விழா. நாள் 15-1-79 பாவாணர் முதலிய ஐவருக்குச் செந்தமிழ்ச் செல்வர் என்னும் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி. முதல்வரை அடுத்துப் பாவாணர் அமர்ந்திருக்கிறார். தம் பக்கத்தில் எவர் இருக்கிறார் என்பதைப்பற்றிய எண்ணம் பாவாணர்க்கு