உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CC

பாவாணர்

169

ஏற்படுவது இல்லையே! பாவாணர் துறை சார்ந்த மதிவாணர், ஐயா, தங்களை அடுத்து முதல்வர் அமர்ந்திருக் கிறார். அவரோடு உரையாடுங்கள்" என்றார். "முதல்வர் முதலாவது உரையாடட்டும்; பின் நான் உரையாடுகிறேன்" என்று கூறி முன்னிருந்த சிந்தனையிலேயே ஆழ்ந்துவிட்டார் பாவாணர்! இவர் தாம் பாவாணர்! இம்முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனார். இதனை இசைத்தவர் மதிவாணர்.

குப்பாயம்

பாவாணர் "குப்பாயத்தை விடாமல் போடுவது ஏன்? எனக்கேட்டேன். முன்னர் உட்சட்டையும் மேற்சட்டையும் கிழிசலாகவே இருக்கும். இவற்றை மறைக்கும் மானமறை குப்பாயமாகவே இருந்தது. ஆதலால் அதனைப் போடாமல் வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டது. நிலைமை திருந்தி விட்டாலும் பழக்கத்தை விட முடியவில்லை" என்று கூறிப் பாவாணர் நகைத்தார். அந்நகைப்பு வறுமையை எள்ளி நகைக்கும் நகைப்பாக வீறுடன் வெளிப்பட்டது! எத்தகைய வெள்ளை உள்ளம் இந்தப் பேரறிவர்க்கு என்று மருட்சியும் ஏற்பட்டது! நிலையாமையும் நிலைப்பும்

சென்னை உணவும் பருவநிலையும் என்னை வருத்தின; ஈளைத்தொல்லை மிகுந்தது; கிடையில் கிடக்கும் நிலையும் ஆயிற்று. பாவாணரிடம் நிலைமையைக் கூறினேன். அவர் ஒருசிறு மறுப்பும் உரைத்தார் அல்லர்; உடலை வைத்துத் தானே எல்லாம் என்று கூறிப் பணி விலகலுக்கு இசைவு தந்தார். அப்பொழுது ஓர் அரிய செய்தியைக் குறிப்பிட்டார்:

சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமியார் அவர்க்குப் பணிநிலைப்பாணைக் கோப்பு நகராட்சித் தலைவர் இரத்தின சாமியார்க்குச் சென்றது. இரத்தின சாமியார் மாம்பழச்சாறு எடுத்து மாலையில் குடித்திருக்கிறார். அவர்க்கு அச்சாறு ஒத்து வரவில்லை. உடனே வயிற்றுப்போக்கு ஆகிவிட்டது! ஒருமுறை இருமுறையல்ல; பன்முறை ஆகியது! தொடர்ந்தது, கண்மயங்கிக் கீழே தள்ளும் நிலையும் ஆகிவிட்டது. எழுந்து போகாக் கிடையிலும் வயிற்றுப் போக்குத் தொடர்ந்தது; மருத்துவர் வந்து பார்த்தும் கட்டுப்படவில்லை. இரவு 11 மணி. தட்டுத்தடுமாறித் தம் மிசைப்பலகைக்குச் சென்றார். ஆங்கிருந்த இராமசாமியார்