உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கோப்பை எடுத்தார். நிலைப்பாணையில் ஒப்பமிட்டு ஒரு செயலை முடித்த நிறைவில் படுத்தார், என்ன நேருமோ தெரியவில்லை! ஒருநல்லவரை நிலைப்படுத்துவது தவறிவிடக் கூடாதே என்றுதான் ஒப்பமிட்டேன்" என்று பாவாணரிடம் கூறினாராம் இரத்தினசாமி. அச் செய்தியைத் தொடர்புபடுத்தி உருகினார் பாவாணர்; அவருள்ளம் எத்தகு மெல்லியது!

கல்பொறுக்கல்

ஒரு முறத்தில் அரிசியைப்பரப்பிக் கல்லைப் பொறுக்கிக் கொண்டிருந்தார் பாவாணர். இளைய மகனார் மணி சமையல் கட்டில் இருந்தார். நிலத்தில் அமர்ந்து குனிந்து பார்த்துப் பார்த்துக் கல் பொறுக்குவதைக் கண்ட தமிழ்ப் பாவை ஆசிரியர் கருணையார். சொல்லைத் தேர்ந்து தேர்ந்து பொறுக்கும் இவர்க்கு இந்நிலை ஆயிற்றே என வருந்தினார். ஆம்! பாவாணர் தம் துணையை இழந்து, தாமே சமைத்து உண்டு, வேலையும் இழந்து "இன்றும் வருவது கொல்லோ நெருநலும், கொன்றது போலும் நிரப்பு' என்று இரங்குமாறு அமைந்த காட்டுப்பாடி வாழ்வுக் காலம்! தம்மைப் புதுவர் ஒருவர் நின்று நோக்குவதைக்கண்டு” வாருங்கள் வாருங்கள் என்று கூறி அமர வைத்தார் பாவாணர். "அவர் இல்லாமையால்தான் இந்நிலை" என்று வெதும்பியதைக் கண்ட கருணையார், நானும் என் மனைவியும் ஈருடலும் ஓருயிருமாக இருந்தோம் என்று எழுதியதை நினைவு கூர்ந்தார். விறகுடைத்தல்

சொற்றொகுப்புக்கருதி நீலமலைக்குச் சென்றார் பாவாணர்; ஆங்குப் பாவாணரிடம் பெரும் பற்றுமை கொண்ட கிருட்டிணையா என்பார் இல்லத்தில் தங்கியிருந்தார். காலை உணவுக்குப் பின்னர்ப் பாவாணரை வீட்டில் தங்கவைத்து விட்டுக் காட்டுக்குச் சென்று திரும்பினார் கிருட்டிணையா. மீளவந்த போது பாவாணர் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, வீட்டின் முன்னால் கிடந்த விறகுக் கட்டையைக் கோடரியால் உடைப் பதைக் கண்டு, "இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள். விடுங்கள் என்று தடுத்தார் கிருட்டிணையா, ஒன்றும் இல்லை; உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது என்றார்! பண்பட்டோர் பார்வையே வேறு தானே! சோறு கண்டால் சொர்க்கம்" (வீடுபேறு) என்று இருப்பவர்க்கு