உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

171

இப்படி எண்ணம் வருமா? கூறியவர் கிருட்டிணையா. மயிலை சாத்திரி மன்றம்; நிகழ்ச்சி, பாவாணர் விழா.

பொண்டான்

சென்னை மறைமலையடிகள் நூல்நிலைய மேன்மாடி யாகிய வள்ளலார்மாளிகையில் பாவாணரும் யானும் சிறிதுகாலம் தங்கியிருந்தோம். ஒருநாள் இரவு 11 மணியளவில் ஒரு பெருச்சாளி வந்துவிட்டது. விளக்குப் போட்டுப் பார்த்தோம். மிகப்பரியது அப்பெருச்சாளி. "பொண்டான் வந்து விட்டது; தடியிருந்தால் அடித்துவிடலாம்" என்று சொல்லிக் கொண்டே வேட்டியை மடித்துக் கட்டினார்; கதவுகளைச் சாத்த ஓடினார். என்ன நினைத்தாரோ, கதவைத் திறந்துவிட்டு விட்டார்! வியப்பாக இருந்தது.வள்ளலார் மாளிகைக்குள் பொண்டானை அடிப்பது முறையாகாது "போகட்டும்" என்றார். "நீங்கள் சைவம்; உங்களுக்கும் அடிப்பது பிடிக்காது" என்றும் கூறினார். இடனறிதல், பிறர் கொள்கைமதிப்பு இவற்றில் பாவாணர் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறார்.

பாம்பண்ணர்

'பாம்பண்ணக்கவுண்டன் உலா என்பதொரு நூல். அந்நூலுடையாரின் அன்னையினிடம் ஒருபிராமணர், பாம் பண்ணன் என்பது கெட்ட பெயர்; நஞ்சுடைய அதன் பெயரை வைத்ததென்ன" என இகழ்ந்தாராம்." அதனைக் கேட்ட பாம் பண்ணன் அன்னையார் "ஐயரே, சேஷண்ணா என்றாலும் அதே நஞ்சுதானே! வட மொழியில் பெயர் வைத்துக் கொண்டார் நஞ்சில்லை! தமிழில் பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் நஞ்சாகி விடுகின்றதா" என்றாராம். இச்செய்தி அவ்வுலாவின் முன்னுரையில் உள்ளமையைக் கூறினேன்.அப்பொழுது பாவாணர், இக்குறும்பு எங்கும் உண்டு என்று சேலம் கல்லூரிக்குச் சொற் பொழிவாற்ற வந்த ஒருவர் 'வசந்தசேனை' என்ற பெயரைச் சொல்லத் தாம் 'தாயுமானவர்' என்ற பெயரைக் கூறி அவரை மறுத்தமையை விளக்கிக் கூறினார். இச் செய்தி சேலம் கல்லூரிப் பணிபற்றிய இடத்தில் கூறப்பட்டது.

சொல்லியல் நெறிமுறை

தோகை என்பது பல பொருள் ஒரு சொல். மயில் தோகை, மயில், மயில் போலும் மங்கை, நெல் கரும்பு ஆகிய பயிர்களின்