உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பக்கத்தாள் ஆகியவை தோகைப் பொருள்களாக வழக்கில் உள்ளன. இவற்றைச் சொற்பிறப்பு வரலாற்று முறையில் வரிசைப்படுத்த வேண்டுமானால் அடிப்படை முறைகள் இரண்டைக் கொள்ள வேண்டும். ஒன்று, இயங்குதிணை நிலைத்திணை ஆகிய இரண்டனுள் நிலைத்திணைப் பெயரீடே முன்னது என்பதும், அதன் வழியது இயங்குதிணைப் பெயரீடு என்பதும். மற்றொன்று கருத்துப் பொருள் காட்சிப் பொருள் என்னும் பொருள் வகைகளுள் காட்சிப் பொருள் முன்னது என்றும், கருத்துப் பொருள் பின்னது என்றும் கொள்ளுதல். இவ்வகையால் தோகைக்குரிய பொருள்களை ஆராய்ந்தால் முதற்கண் நெல்கரும்பு ஆகியவற்றின் தோகையும், மயிலின் தோகையும், அத்தோகையுடைமையால் மயிலும், மயில் போலும் சாயல் உடைமையால் மகளிரும் தோகைப்பெயர் பெற்றனர் என்பது விளக்கமாகும் என எங்கள் உரையாடல் இடை கூறினார் பாவாணர்.

அவ்வாறே செய்க

டயே

யான் பாவாணர் துறையில் பணி செய்த காலம். அகர முதலியில் இடம் பெறாத சொற்களைத் தொகுத்துப் பொருளும், தொடரும் தரவேண்டிய பொறுப்பினது என்னது. எனக்குத் தந்த கடமையை முடிந்த அளவான் கிழமைதோறும் வெள்ளியன்று பாவாணர்க்குக் கோப்பு விடுத்து வந்தேன். ஓரிரு கிழமைகளின் பின்னர் அகர முதலியில் இடம் பெறாச் சொற்களைத் தொகுப்பதே நுங்கள் கடன்; இடம் பெற்ற சொற்களையும் மீள எழுதுதல் இரட்டிப்பு வேலை; அது தவிர்க்க” என எழுதினார் பாவாணர். என் தொகுப்பைப் பாவாணர் கூர்ந்து பாராமல் சொற்பட்டியைக் கண்ட அளவில் எழுதியுள்ளார் என்பது புலப்பட்டது. அதனால், "இயக்குநர் என்னும் முறையில் தாங்கள் இடும் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளேன். 'அகரமுதலிப் பணியின் சீர்மை கருதி ஒரு கருத்தை உரைத்தல் நலப்பாடெனக் கொண்டு இதனை எழுதுகின்றேன்' எனத் தொடங்கினேன். அகர முதலியில்இடம் பெறாச் சொற்களைத் தொகுத்துப் பொருள் விளக்கம் செய்வதுடன், அகர முதலியில் இடம்பெற்ற சொற்களிலும் பொருள் விடுபாடு இருக்குமானால் அதனைச் சேர்த்தலும் நம் கடன் எனக் கருதியமையால் அச்சொல்லை எழுதிவிடுபாட்டுப் பொருளையும் அப்பொருள்