உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

உயர்ந்த பதவியில் இருந்தாலும் கவலைப்படாமல் அவர் தம் கருத்தை மறுத்துரைத்து வந்தவர்"

-என்கிறார் அவர்தம் மாணவர் மா. சு. சம்பந்தனார்.

"1934 - 36 ஆம் ஆண்டுகள் திருச்சிப்புத்தூர் பிசப் கீபர் உயர்நிலைப்பள்ளியில் யான் மாணவன். ஐந்தாம் ஆறாம் படிவங்களில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்து மொழிப் பற்றையும் இனப் பற்றையும் வளர்த்தார்.

அவர் தம் இல்லத்தில் ஓயாது படிப்பார்; இன்னிசை மிழற்றுவார்; யாழ்மீட்டுவார், மத்தளம் இசைப்பார்; இசைப் பாமாலைகள் தொடுப்பார்; அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கட்குத் திருச்சி தேவர் மன்றத்தில் வரவேற்பளித்த போது தாமே பாடினார். திருக்கோயில் என்ற தாளிகையில் நம்பு மதம் நம்பா மதம் என்று குறித்து இறைநம்பிக்கை உடையவர்களையும் இல்லாதவர்களையும் இணைத்தார்."

-என்கிறார் அவர்தம் மாணவர் சு. பொன்னுசாமி.

பாவாணர் நடத்தும் செய்யுள் வகுப்பு, இசையுடன் தவழும். இசையின்றிப் பாடலைக் கற்பிக்கக்கூடாது என்பதும், தமிழாசிரியர் தகுதிகளுள் இசைப்புலமை என்பதும் ஒன்று என்பதும் பாவாணர் கொள்கைகள்.

படிப்பும் அடிப்பும்

வகுப்புக் கட்டொழுங்கில் பாவாணர் மிகக்கண்டிப் பானவர்.மாணவர் உளங்கொளக் கற்பிப்பார். ஒன்றற்குப் பல எடுத்துக்காட்டுக் காட்டியும் கற்பிப்பார். இலக்கண வகுப்பில் மிக ஆர்வம் கொள்வார். தாம் கற்பித்த இலக்கண நூற்பாக்களை மனப்பாடமாக்க வற்புறுத்துவார். மனப் பாடமாகச் சொல்லத் தவறும் மாணவர் எவராயினும் பாவாணரின் அடிக்குத்தப்ப முடியாது.நாள் ஒன்றுக்கு நன்னூல் நூற்பா ஐந்து ஒப்பித்தே ஆகவேண்டும் என்ற திட்டமும் பாவாணர்க்கு உண்டு. ஒப்பிக்கத் தவறும் மாணவர்க்குப் புளியவளார் அடியும் கட்டாயம் உண்டு என்பதால் மாணவர்கள் மனப்பாடம் செய்தலை நோன்பு எனக் கொண்டனர். இலக்கணத்தில் முழு மதிப்பெண் பெற்று விடுவர். பாவாணரிடம் பயின்ற மாணவர்கள்