உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரைந்தோன் வரைவு

பாவாணர் தம் வரலாற்றைத் தாமே வரையக் கருத்துக் கொண்டார். 27-10-60 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கொற்றவன்குடி, விரிவுரையாளர் குடியிருப்பில் இருந்து, கழகக் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ.சுப்பையாபிள்ளை அவர் களுக்கு வரைந்த விரிவான கடிதத்தில் "என் நூல் களெல்லாம் வெளிவந்த பின் என் வரலாற்றை நானே வரைவேன் என்றெழுதினார்.

12-1-64 இல் மதுரை, தமிழ்க் காப்புக் கழகத்தில் 'தமிழ்ப்பெருங் காவலர்' என்னும் பட்டம் வழங்கிய போது பட்டம் எனத் தொடங்கி ஓர் அரிய பொழிவாற்றினார். காப்புக் கழகத் தலைவர் பேரா. சி. இலக்குவனார் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் என்ற முறையில் வரவேற்பும் நன்றியும் எனக்கு வாய்த்தன.நன்றியில், பாவாணர் ஆய்திறம் பாவால் இசைத்து,

“பாவாணர் உள்ளம் பறைசாற்றும் வீரத்தை;

ஆய்வாளர் நூலகத்து நுண்ணிதாய்க் கண்டறிவார்; வேட்பாளர் மேடையில் கேட்டறிவார்; அல்லாதார் மீசையில் கண்டேனும் உண்மை உணரட்டும்; தூய தமிழுணர்ச்சி ஓங்கிப் பெருகட்டும்; ஏய தமிழாட்சி எங்கும் நிலவட்டும்;

என்றென்று வாழ்த்தி இனிய நலமுரைத்து."

அமைந்தேன்.பாவாணரை நெருங்கினேன்; “அள்ளி அள்ளிக் கொள்ளும் வள்ளற் செல்வத்தை வைப்பாகக் கொண்டிருந்தும் வறுவியேம் எனவாழும் அறிவறியார் பெருகியுள்ள தமிழ் மண்ணுக்குத் தங்கள் வரலாறு கட்டாயம் வேண்டும். நாலாயிரம் பேரைத் தட்டி யெழுப்பாவிட்டாலும், நான்குபேரைத் தட்டி யெழுப்பினாலும் போதும்; தாங்கள் குறிப்புத்தந்தால், உடன் வந்து வரைவேன்' என்றேன். ஒரு பெருநகை நகைத்தார். "என் வரலாறா?" என்றார். பின்னர்க் கண்ணை மூடித் தலைதாழ்ந்து