உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சிந்தித்தார். "நானே எழுதுவேன்" என்றார். “தாங்கள் செய்தால் அக்கொடைக்கு வேறு கொடை இல்லை" என அமைந்து, அதனை நிறைவேற்றி உதவ வேண்டினேன். பின்னர் அவரொடு அணுக்கத் தொடர்பு கொள்ளவும், ஓரிடத்து உறையவும், ஒரு துறையில் பணியாற்றவும் கூடிய பேறுகளின் போதும் நினைவூட்டினேன்! பாட்டு, பழைய பாட்டே!'

-

-

பேராசிரியர் பூங்காவனரும் இம் முயற்சியிலே ஊன்றினார். 17-2-81 இல் எழுதிய அஞ்சலில், "ஓராண்டுக்கு முன்னரே ஐயா அவர்கள் உயிருடன் வாழ்ந்தபோதே அவர்களின் வரலாற்றை எழுத விரும்பினேன். ஐயா அவர்களிடமும் என் கருத்தை வெளியிட்டேன். ஒரு பெருஞ் சிரிப்புச் சிரித்து “என் வரலாற்றை நானே எழுதுவேன்" என்று தட்டிக்கழித்து விட்டார்கள். ஐயா அவர்களின் பேச்சை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இசைத் தட்டில் பதிவு செய்யவும் விரும்பி எழுதிக்கேட்டேன். ஆங்கில நூல் வெளியான பின்னர்ப் பதிவு செய்துகொள்ளலாம் என்று எழுதிவிட்டர்கள் என்பதால் பேராசிரியர் அவர்களின் முயற்சி புலப்படும்."

உடையவர் மறைந்துவிட்டார்! உருகினார் கழக ஆட்சியாளர்; மாலைமாலையாகக் கண்ணீர் சொரிந்தார்; என்னைக்கண்ட அளவில் "எவ்வளவு விரைவில் கூடுமோ அவ்வளவு விரைவில் பாவாணர் வரலாறு வெளிவர வேண்டும்" என்றார். என்னுள் இருந்த வரலாற்று வித்துக்கு, நீர்விட்டார் தாமரைச்செல்வர்! ஐம்பதாண்டு அணுக்கரல்லரோ அவர்! பாவாணர் கடிதக் காப்பாளர் அல்லரோ அவர! குடத்துள் விளக்கை எவரும் அறிவராக் காலத்தே அறிந்து போற்றிக் குன்றத்தின் மேலேற்றிக் கொலுவீற்றிருக்க வைத்த ஏந்தல் அல்லரோ அவர்! அவர்க்குப் பின்னர்த் தானே பிறர் பிறர் தொடர்தொடராய் அறியவும் அணுக்கராகவும் அரவணைக் கவும் ஆயது!

பாவாணர்க்குக் கல்லறையில் நிகழ்ந்த இரங்கற் கூட்டத் திற்குப் பின்னர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களிடம் பாவாணர் வரலாறு எழுத விரும்பும் என் விருப்பை யுரைத்து, உதவ வேண்டும் என வேண்டினேன். செய்திகள், தொடர்புகள், கடிதக் குறிப்புகள் பெறுதற்கு வாய்புத்தர வேண்டினேன்; தாமே பாவாணர் வரலாறு எழுதவிருப்பதாகக் கூறியதுடன், இரண்டு வரலாறு வருதலாலும் குறைவில்லை; உங்கள் நோக்குப்படி ஒரு வரலாறு எழுதுங்கள்; என் நோக்குப் படி யான் ஒரு வரலாறு எழுதுவேன்" என்றார்கள். அதுவும் தகு மென அமைந்தேன்.