உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

7

தென்மொழி, பாவாணர் நினைவிதழ் கண்டேன். அதில், 'பாவாணர் வாழ்க்கை வரலாறு' என்னும் தலைப்பில் (61) ஓர் அறிக்கை காணப்பட்டது.

"மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர். அவருடன் ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகள் அகப்புறத் தொடர்பு கொண்டும், துணையிருந்தும் அவரின் அரியவாற்றலை உலகுக்கு வெளிப்படுத்தியும் அவரின் அறிவு நலன்களை ஊக்கப் படுத்தி வெளிக்கொணர்ந்து மக்களுக்காக்கிய அவரின் தலை மாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் திட்டமிட்டுள்ளார். அவரின் இந்தப்பணி மிகவும் செவ்வையாக அமையவேண்டும் என்பதால் கடந்த காலங்களில் பாவாணருடன் தொடர்புகொண்ட அறிஞர்கள், மாணவர்கள், அன்பர்கள், நிறுவனங்கள் தங்களளவில் தாங்களறிந்த செய்திகள், புகைப்படங்கள், மடல்கள், கையெழுத்துப் படிகள், பழைய வெளியீடுகள் முதலியவற்றைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆசிரியர், தென்மொழி, சென்னை 5 என்னும் முகவரிக்கு அனுப்பித்தர வேண்டுகின்றோம். அமைச்சர் என்பது அது. அதனையறிந்து, பாவாணர் வரலாறு வெளிப்படும் சுடர் அரும்பியதாய் மகிழ்ந்தேன்.

-

செந்தமிழ்ச் செல்வி சிலம்பு -55, பரல்-6 பாவாணர் நினைவு மலராக வெளிவந்தது. மொழிப் பேரறிஞர் பாவாணரைப்பற்றிக் கட்டுரை விடுக்குமாறு நேரில் கூறியதுடன் 23-1-81 அஞ்சலிலும், "மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்களைப்பற்றிய தங்கள் கட்டுரையினை விரைந்தெழுதி யனுப்புமாறு வேண்டுகிறேன்" என்று எழுதினார் கழக ஆட்சியாளர். தொடர் கட்டுரையாகச் செல்வியில் "மொழிஞாயிறு பாவாணரும் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலியும்" என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஆசிரியர் உரையில், "இவ்விதழில் பாவாணர் அவர்களைப்பற்றிக் கழக இலக்கியச் செம்மல்புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையின் ஒரு பகுதியினை வெளியிட்டுள்ளோம்" எனத் தோற்றுவாயும் செய்தனர். செல்வியின் அளவில் 26 பக்கங்கள் கொண்ட கட்டுரை அது அக்கட்டுரைக்கென மேற்கொண்டுள்ள உழைப்பு வரலாற்றுக்கு முளையாயிற்று."

அக் கட்டுரையைக்கண்ட பேரா. பூங்காவனர் 17-2-81 இல், "செல்வி இதழ் இன்று வந்தது. தங்களின் (தொடர்) கட்டுரையைப் பன்முறை படித்தேன். உள்ளத்தை உருக்கிவிட்டது. பாவாணர்