உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஐயா அவர்களின் உடல் அடக்கத்தின் போதெழுந்த இழப்புத் துன்பத்தினும் மிகுதியாய்த் துன்பம் பெருகிவிட்டது.

46

"ஐயா அவர்களின் வரலாறு, தமிழ் வரலாறு; தமிழர் வரலாறு; தமிழுக்கு ஆக்கமும் தமிழருக்கு ஊக்கமும் விழிப்பும் ஊட்டக்கூடியது. நாவலர் வரலாற்றைப் படைத்த தாங்கள் தமிழ்க் காவலர் வரலாற்றையும் படையுங்கள். தங்கள் ஒருவரால்தாம் அப்பணியைச் செப்பமாய்ச் செய்யவியலும் என்று நான் உறுதியாய் நம்புகின்றேன். 'செல்வி' இதழ்க் கட்டுரையின் முதல் தொடரே என் கருத்தை என் விழைவைப் பன்மடங்கு உறுதியாக் கியுள்ளது. இஃதென் வேண்டுகோள்; தமிழரின் வேண்டுகோள்; வேண்டுகின்றேன்” என்று வரைந்தார். இவ்வளவுடன் நில்லாமல் வரலாற்றுக்குத் தக்க வழிகாட்டியும் உதவினார்.

"கடந்த சிலவாண்டுகளில் இயக்கத் தொடர்பாக ஐயா அவர்கள் எழுதிய 36 கடிதங்கள் என்னிடமுள. அவற்றைப் படியெடுத்துத் தருவேன். ஐயா அவர்களுடன் நான் பழகிய வரையில் எனக்குத்தெரிந்த செய்திகளைத் தொகுத்தெழுதித் தருவேன். 'செல்வி' முதலாய இதழ்கள் வழி வேண்டினால் பிற அன்பர்களும் உதவுவர்.

இன்னுமொன்று : ஐயா அவர்களால் எழுதப்பட்ட படைப்புகள் நூற்றுக்கணக்கானவை. அனைத்தும் தொகுக்கப் பெறல் வேண்டும். பல இதழ்களில் மலர்களில் எழுதியுளார்கள். பல தமிழ்ச் சிக்கல்களைத் தீர்த்து வைத்துள்ளார்கள். பலரை வாயடங்கச் செய்துள்ளார்கள். அவையெல்லாம் அரும்பெருங் களஞ்சியமாயமையவன. அப்பணியையும் தாங்களே மேற் கொள்ள வேண்டும். விருப்போடு செய்வீர்கள், பொறுப்போடு செய்வீர்கள். இப்பணிகளையாற்றத் தாங்களும் கழகமும் முன்வரவில்லை யென்றால் வேறு யாரே முன்வருவர்?" என வினா எழுப்பித் தூண்டினார். மீட்போலையில் விளக்கமிக்க வேண்டு கோளையும் விடுத்தார். இவை வரலாற்றுப் பயிர்க்கு வாய்த்த உரமாயின.

பாவாணர் நூல்களைத் தொகுத்தேன்; கடிதங்களைத் தொகுத்தேன்; எழுத்துப்படிகள், அறிக்கைகள், வெளியீடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து முயன்று கிடைத்தஅளவால் தொகுத்தேன்.

பெருகிய அளவால் கிடைத்த கடிதங்கள் எனச் சுட்டுவ தாயின் வரன்முறையே கழக ஆட்சியாளர் அவர்கள் தொகுத்துக்