உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

9

கோப்பில் வைத்திருந்த கடிதங்களே ஏறத்தாழ 1300 எண்ணிக்கையை, கோப்பில் வைக்கப்படாமல் கட்டாக இருந்தவை 120. இவற்றை வழங்கியவர் இற்றைக் கழக ஆட்சியாளர் இரா. முத்துக் குமாரசாமி அவர்கள் அடுத்துச் சேலம் அரிமாப் புலவர் கி.மு.சின்னாண்டார் வயத்தவை ஏறத்தாழ 200. பேராசிரியர் பூங்காவனர் தம் வயத்ததாகவும் பெரும் புலவர் வி. பொ. பழனிவேலனார் முதலிய பிறர் வயத்ததாகவும் தொகுத்து வழங்கியவை அடுத்த நிலையவை. அதற்கும் அடுத்தநிலையவை நெய்வேலி உ.த.க., பாவாணர் தமிழ்க்குடும்பம் சார்ந்த கடிதங்களும், அவர்கள் வழியே பிறர் கடிதங்களாக வாய்த்தவையும், அன்புவாணர் அவர்களும் அப்பர் கருப்பையா அவர்களும் உதவியவை இவை. பாவாணரால் பெரிதும் பாராட்டப்படும் முத்துக்கிருட்டிணர் கடிதம் ஒன்றும் வாய்க்கவில்லையே எனக் கவன்றிருந்தகாலை, ஏறத்தாழ 30 கடிதங்களை அவர்தம்மகளார் வழியே பெற்று உதவிய நெய்வேலி அறவாழியார் உதவி பெரிது. தமிழ்ப் பாவைத் தொகுப்புகளையும் பாவாணர்தம் கைப்பட வரைந்த கலைச்சொல்லாக்கப் பட்டியை யும் அரிதில் தேடிப் பெரிதில் உதவிய ஆசிரியர் அருளனார் கருணையார்) ஆர்வம் பெரிது. பாவாணர் இயற்றிய நூல்களுள் தம்மிடம் இருந்தவற்றையெல்லாம் சுட்டியெழுதி வேண்டுப வற்றைக் கொள்கவெனத் தாமே முன்வந்துதவிய திருச்சி க.சி. தாமரைக்கோ பேரன்புக்குரியர். புன்செய்ப் புளியம்பட்டி ஆடலரசனார் இளமுருகனார், முருகவேள், திருச்சி அருள்செல்லத் துரையார், மு.வ. பரமசிவனார், ந. பிச்சுமணியார், சேலம் இல.சு. இரத்தினவேலனார், செங்காட்டுப் பட்டிச் செந்தமிழ்க்கிழார் ஆகியோர் உழுவலன் பொடும் தம்முடையவும் பிறருடையவுமாம் மடல்களும் அறிக்கைகளும் தொகுத்து தவியமை பாராட்டுக்குரியது. பாவாணரின் மாணவர் பொன்னுசாமி அவர்கள்தம் முதுமையிலும் கொண்ட இளமையன்பு நெகிழச் செய்வது! பாவாணர் மேல் எத்தகைய பற்றுமை அவருக்கு! இன்னோர் காலத்தால் செய்த கொடைகள் இவ்வரலாற்றுப் பயிர்க்கு வேலிக் காப்பாய் விளங்கின. அஞ்சல்களின் எண்ணிக்கைப் பெருக்க உதவியால் தனித்தனியே சுட்டப் பட்டவர்கள் இவர்கள். ஓரட்டையாலும் நெஞ்சத்தில் நிறைந்து நிற்பவர் மிகப்பலர். அவர்களை நினைந்து போற்றி அமைதலே இம் முன்னுரைக்குத் தகுமென அமைந்தேன்.

பாவாணர் வரலாற்றுக்கு மூலவைப்பாகப் பாவாணர் கடிதங்கள், பாவாணர் உவமைகள், பாவாணர் பொன் மொழிகள் என்பவை முன்னரே வெளிவந்தன. பாவாணர் வேர்ச்சொ சுவடியும் வெளிப்பட்டது. பாவாணர் பாடல்கள் பாவாணர்