உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மடல்கள் என்பனவும் அச்சுக்கு அணியப்படுத்திக் கழக வெளியீட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள. இவையெல்லாம் இவ்வரலாற்றுக்கு உதவிச் சான்றுகளாக வாய்த்தவை.

வரலாற்றுக்காகப் பல்கால் பல இடங்களுக்குச் சென்று பெருமக்கள் பலரைக்கண்டு கலந்துரையாட நேர்ந்தது. அந்நேர்வில் கிடைத்த கொடைகளுள் பலவும் 'பல்சுவைப் பாகின்' வைப்புப் பொருளாயின.

பாவாணரைப் பற்றிய நினைவுக் கூட்டங்கள், விழாக்கள், ஆய்வுகள், படத்திறப்பு நிகழ்ச்சி, உலகத் தமிழாராயச்சி நிறுவன அறக்கட்டளைப் பொழிவுகள் ன்னவெல்லாம் வரலாற்றுக்கு அழுத்தம் தந்தன.

இவ்

பாவாணர் பிறந்த வட்டத்தில் அமைந்த ஊரணுக்கம், அவர் முதற்கண் பணியாற்றிய சீயோன்மலையில் பயின்ற தொடர் பணுக்கம், அவர்தம் தந்தைவழித்தொடர்பாளர் உறவணுக்கம், பாவாணரின் மூத்த மனைவியார் மைந்தர் மணவாளர் தம்மொடு பழகிய கவை அணுக்கம், மணவாளர்க்கு நண்பினராகவும் ஆசிரியராகவும் முறையே இருந்த நெடுஞ்செழியனார், மணியர் இ.மு.சுப்பிரமணியனார் ஆகியோரிடம் இருந்த நுட்பணுக்கம், செல்வி இதழாசிரியர், கழக நூலாசிரியர் ஆகிய வகையால் நேர்ந்த எழுத்துறவணுக்கம், ஆய்வு கையால் மறைமலையடிகள் நூல்க வள்ளலார் மாளிகை உடனுறை வணுக்கம், தம் துறைக்குத் தமிழ்ச் சொற்றொகுப் பாளனாக அமைந்தமையால் நேர்ந்த துறை நுணுக்கம்,பாவாணர் உயிர்ப்பாகத் திகழ்ந்த உத.க. உறுப்பாண்மை பெறாமலே உரிய நிகழ்ச்சிகளிலெல்லாம் ஒன்றி உடனாய கொள்கையணிக்கம், மறைமலையைக் கடைப்பிடி யணுக்கம் இன்னவெல்லாம் இவ்வரலாற்றுப் படைப்புக்கு ஏந்தாக இருந்தமை முன்னால் இனிதுணர வாய்க்கின்றன. இவ்வணுக் கங்கங்களுள் ஒன்றிரண்டோ மிகையோ அறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் பாவாணர் வழிஞருள் ஒருவனென என்னையும் உட்கொண்டும், தாம் தரும் செய்திகள் பயன்பாட்டுக்கும் என்று கொண்டும், அஞ்சல்வழியாகவும் நேரிடை உரையாடல் வழியாகவும் பாவாணர் வரலாற்றுச் செய்திகள் உதவியுள்ளனர். பாவாணர் பெயரொடு விளங்கும் என் ஆய்வு நூலகத்தில் செந்தமிழ்ச் செல்வி இதழ்கள் முற்றாக உண்மை இவ்வரலாற்று ஆக்கத்திற்குப் பெருந்துணையாய் அமைந்தது. பின்னர்த் தொடர்பாக வாய்த்த தென்மொழி, முதன்மொழி, பிழம், மீட்போலை, அறிவு, கைகாட்டி, தமிழ்ப்பாவை இன்னவற்றிலும்