உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

11

ஓரளவு தொகுப்புண்மையும் உதவிற்று. தென்மொழியிற் கிட்டாதசில மடலங்களை மறைமலையடிகள் நூலகமும், அறவாழியார் மனை நூலகமும் உதவின. இவ்வெல்லாம் இவ்வரலாற்றுத் தொகைக்கு உதவிய வைப்புகளாம்.

இவ்வரலாறு 16 தலைப்புகளால் இயல்கின்றது. மும் மதிப்பீடுகளில் தொடங்கி படைப்பும் பல்கும் என்பதுடன் நிறைகின்றது.

பல்நிலைப் பணிகள் என்பதும் (4) பல்சுவைப்பாகு (13) என்பதும் பிற தலைப்புகளினும் விரிவுடையவாகலின் முன்னது ஆறு உட்பிரிவுகளையும், பின்னது மூன்று உட்பிரிவுகளையும் கொண்டன. முன்னதன் பகுப்புகள் அரும்பு, முகை, மொக்கு, போது, மலர், அலர் என வளர் நிலை ஒழுங்குப் பகுப்புக்கு இடமாக்கப்பட்டன. பாவாண மலரின், பணிவளர் நிலைக் குறிப்பு நோக்கு இது. பின்னது சொல்லப்படும் செய்திகளுக்கு ஏற்பக், கேட்டலும் கிளத்தலும், நெருங்கலும் நிகழ்தலும், அறிதலும் ஆய்தலும், எனப் பொருள் கருதிய பகுப்பாக்கப் பட்டன. ஒன்பதாம் பகுதி தேடிவரு திருவுக்கு மூலம் என்பது. கருதுகோள் தலைப்பு. பாவாணர் என்னும் தனி ஒருவர் வாழவேண்டும் என்பதற்காகப் பலரும் உதவ முந்தியமை, பாவாணர் என்னும் தமிழ் வாழ்வுக்கு உதவ முந்திய முந்தலேயாம். பாவாணர் கொண்டிருந்த பல்லான்ற திறங்களைத் தொகுத்துக்கூறிய பகுதி அது.16ஆம்தலைப்பு, படைப்பும் பல்கும் என்பது, அதில் படைப்பு என்பது பாவாணர் இயற்றிய நூல்கள். பல்கும் என்பது அவர் நூல்கள் - எழுத்துகள் - வழியே நூலாகியவை. கடிதங்கள், பொன் மொழிகள், உவமைகள், பாடல்கள் இன்னவை பல்குதல் வழிப்பட்ட பாவாணத் தொகைகளேயாம். எஞ்சிய தலைப்புகள் பெயரறிந்த அளவால் பொருள் விளக்கமாவன.

-

தொகுப்பில் கிடைத்த குறிப்புகள் அனைத்தும் இவ் வரலாற்றில் இடம்பெற்றுள என்று கூறல் சாலாது. அதன், செம்பாதிக்கும் குறையவே இடம் பெற்றுளது, ஏறத்தாழ ஆயிரம் பக்கம் - நூலாய்வுடன் வெளிவர வேண்டிய இவ்வரலாறு காலநிலை - பொருணிலை முதலிய கரணியங்களால் சுருக்கப் பதிப்பாக அமைந்தது, ஆனால், ஓர் உறுதியை இவ்விடத்தே உரைத்தே ஆதல்வேண்டும். ஒரு தொடர்தானும் ஒரு குறிப்பு தானும் பாவாணச் சான்றின்றி இணைக்கப் பெற்றிலது என்பதே அது. நாவலர் பாரதியார் வரலாற்றை எழுதி முடித்து, அவரிடமே படித்தும் காட்டி, முழுமையாகப் படிக்கக் கேட்டேன்; முற்றும்

-