உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சரிதான் என்று வாங்கப்பெற்ற ஒப்புகைக் கைச்சான்றுபோல இவ்வரலாற்றுப் பெருமகனாரிடம் வாங்கக்கூடும் நிலை இல்லையே என்பதோர் குறையேயாம். இத் தீர்க்க வியலாக் குறைக்கு என் செய்வது?

பாவாணர் வரலாற்று நூல் கழகவழி கழகவழி வெளிவர வேண்டுவதே! கழகம்தானே பாவாணர் வரலாற்றுக் கொடையில் பெரும்பகுதிக்கு உரிமை பூண்டது! பாவாணர் பதிப்பகத்தின் வெளியீடாக வருதலும் சால்பே என உவப்புடன் கழகம் ஏற்றுக் கொண்டது. ஆதலால் கழக ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு யானும் பாவாணர் பதிப்பகமும் நன்றியம்! இனிப் பாவாணர் பதிப்பகம் வெளியிட்டமையை யான் பாராட்டுவதேன்? பாவாணர் வழிஞருள் யானும் ஒருவனாக ஒன்றிப் பாராட்டி நன்றியுரைக்கக் கடப்பட்டுள்ளேன். இவ்வரலாற்றுக்கு உதவிய பெருமக்களைப் பட்டியலிட்டால் நூற்றுவரையும் தாண்டும். ஆதலால் நெஞ்சார்ந்த நன்றியை நேயத்தால் பொதுவகையில் சொல்லி அமைகின்றேன்.பாவாணர் நூலாய்வும், தேவநேயமும் தனித்தனியே பெருநூலாகத் தக்கன. அவை வெளிப்படல் ஒரு தொகுப்பாகப் பாவாணரை அறிந்துகொள்ள உதவும்! 'பாவாணர் பெருமை' என்னும் நூல் புதுவைத் தமிழ் மல்லனாரால் எழுதி அண்மையில் வெளிவந்தது. எனக்கு இதுகாறும் கிட்டாத ஓரிரு குறிப்புகளுக்கு உதவியது. அக்குறிப்புள இடமும் செய்தியும் சுட்டப்பட்டுள.

மறைமலையடிகளார் நாட்குறிப்பும் இதுகால் வெளி வந்தது. அதில் முக்குறிப்புகள் கிட்டின; அவையும் இணைத்துச் சுட்டப்பட்டன.

பாவாணர் தொடக்கக் கல்வி, ஆசிரியர் பயிற்சி பற்றிய செய்திகள் அச்சீட்டு முடிநிலையில்கிடைத்தன. அவையும் உரியவகையில் போற்றப்பெற்றுள,

தனித்தமிழ்ப் பற்றாளர், தொண்டர்,ஆர்வலர், அன்பர், எழுத்தாளர், பாவலர், பொழிவர் ஆகிய அனைவர்க்கும் இப்

'பாவாணர்' படையலாம்!

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,

தமிழ்ச் செல்வம்

திருநகர், மதுரை 625 006