உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சிலை, மகரம் - சுறவம் - இவற்றுள் வலப்பக்கமுள்ள சொற்களைத் தான் இன்று ஆள்கின்றேன்" என்றும் (9-4-71 வ.சு.) பாவாணர் தம் அறியாமையைச்சுட்டி எழுதுதல் எத்தகு பெருநிலை! எத்துணைப் பேர்களுக்கு இது வாய்க்கும்?

வீறு

"கட்டுரையில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஒவ்வொரு பகுதியும் ஆராய்ச்சி முடிவென்பது ஒருமுறை வாசித்தால் தெரியவரும் (18-8-31) என்றும், “நான் அனுப்புவதில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஏதேனும் பிறர்க்கு உடன்பாடன்றாயினும் அவர்கூறும் தடைகட்கெல்லாம் தகுந்த விடைகூறச் சித்த மாயிருக்கிறேன் (29-9-31) என்றும், கட்டுரைக்கு எவரேனும் மறுப்பு எழுதினால் விடையளிக்கத் தயாராய் இருக்கிறேன்" (12- 10-31) என்றும் அடிநாளிலேயே கடிதம் வரையும் பாவாணர் தனிவீறு மேலும் வளர்ந்ததேயன்றிக் குறைந்ததன்று.

கல்லும் சொல்லும்

கல்லாய்வில் வல்ல ஓர் அறிஞர் இக்கல் இத்தனை இலக்கம் ஆண்டுப் பழையது என்றால் ஏற்றுக்கொள்ளும் உலகம், ஐம்பான் ஆண்டுகளாகச் சொல்லாய்விலேயே ஆழமுழுகி ஆய்ந்துள்ள ஒருவன் அச்சொற்பழைமையைச் சொலுங்கால் ஐயுறுவானேன் என்று வினாவும் வீறு படைத்தவர் பாவாணர் என்பது எண்ணத்தக்கதாம்.

உருவம்

சொல்லாராய்ச்சிக் கட்டுரை நூலில் பாவாணர் படத்தை வெளியிட விரும்பினார் கழக ஆட்சியாளர் வ.சு. என் உருவம் எடுக்க விரும்பவில்லை என மறுத்து விட்டார். அவர் நூல்கள் எதிலும் அவர் படம் அமையவில்லை. இயற்கையிலே நான் தோற்றப் பொலிவில்லாதவன்" என்று பாவாணர் தம்மைத் தாமே மதிப்பிட்டுக் கொண்டுள்ளார் என்பதை எவராவது நம்ப முடியுமா? அவர் எழுத்தே உள்ள போது நம்பாமல் எப்படி இருப்பது? எத்தகைய வீறுமிக்க -பொலிவுமிக்க - கட்டமைந்த எடுப்பான தோற்றம், பாவாணர் தோற்றம்! இதனைத் 'தம் மொடுக்கம்' என்பதையன்றி என்ன சொல்வது?

-