உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

177

தொண்டின் உறைப்பு

"8-3-64 இல் நடக்க இருப்பது குறைந்த சம்பளத் தமிழாசிரியர் வகுப்பாதலால் ஒருவரையும் வற்புறுத்தவோ இடர்ப்படுத்தவோ வேண்டேன். பெற்றது கொண்டு பொந்திகை (திருப்தி) யடைவேன்.தங்கற்கும் அறையமர்த்த வேண்டிய தில்லை. என் உறவினர் வீட்டில் தங்கிக் கொள்வேன். வழிச் செலவுப் பணமும் வந்த பின் வாங்கிக் கொள்கிறேன்." எனச் சேலத்தில் நிகழ இருக்கும் தமிழாசிரியர் தொல்காப்பிய வகுப்புக்கு வருதல் பற்றி 29-2-64 இல் திரு. மி.மு. சின்னாண்டார்க்கு மடல் எழுதுகிறார்

பாவாணர்.

அரைக்கட்டணம்

20-1-68 இல், “மதுரை மாணவர் அனைவரும் ஓரிடத்தில் கூட இயலின் நான்வந்து மொழிச்சிக்கல் பற்றி விளக்கமாய்ப் பேச அணியமாயிருக்கிறேன். போக வரப் பேரியங்கிக் கட்டணம் கொடுத்தாற்போதும். அதுவும் இல்லாக் காலும் வருவேன் எனத் திரு. வீ.ப.கா. சுந்தரனார்க்கு எழுதுகின்றார். இந்தியெதிர்ப்புக் கூட்டங்களுக்கு அரைக் கட்டணப் போக்கு வரவு தரினும் வர அணியமாக இருப்பதாக எழுதியதை முன்னர்க் கண்டுளோம். இவை பாவாணர் தொண்டின் உறைப்புச் சான்றுகளாகும். தம்நிலைசில

யற்கைக்கண்ணொளி குன்றியுள்ளது உண்மைதான். ஆயின், செயற்கைக் கண்ணொளி இன்றுள்ளது. என் வேலைக்குப் போதும். மேலும், எனக்கேற்ற பணியும் நல்ல சம்பளமும் கிடைப்பின் மகிழ்ச்சியாலும் நல்லுணவினாலும் உடல்நலமும் உறுப்பாற்றலும் மிகுமென்றே கருதுகின்றேன். அண்மையில் எனக்கு வந்த கிறுகிறுப்பிற்கும் உணவுக் குறைவே அடிப்படைக் கரணியம்

- திரு.வை. சொ. 7-11-70

20 நாட்குமுன் ஒருவைகறை திடுமென மயங்கி விழுந்து விட்டேன். அரத்தக்கொதிப்பின் விளைவாகத் தெரிகின்றது. இன்னும் முழு நலமில்லை.

-ந.பி.22-9-70.