உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சென்றமாதம் முழுதும் வெப்பமிகையால் மிக டர்ப் பட்டுப் போனேன். ஒரு கிழமை அண்ணமும் நாவும் அழன்று பெரிதும் துன்புற்றேன்.

கு.பூ.3-6-80

மறைமலையடிகளும் யானும் ஒரு தனி வகையரேம். எம் வாழ்வைத் தமிழ்வாழ்வொடு ஒன்றுவித்துக் கொண்டேம். தமிழை வடமொழியினின்று மீட்கவே இறைவனாற் படைக்கப்பட்டேம்.

தமிழ் ஆரியப் பேராட்டத்திற்கு ஆங்கில அறிஞர் ஒருவரும் பிராமணர் ஒருவரும் சிவநெறியார் ஒருவருமாக மூவர் எனக்கு முன் தோன்றினர். மேலையர்க்கறிவிக்க நான் ஏற்பட்டுள்ளேன். என்னோடு இப் போராட்டம் முடிகின்றது. இத்தகைய போராட்டம் உங்கட்கில்லை.

நடுமை நயம்

கா. இள. 4-11-71.

நுங்கள் பாரியைப் பார்த்தேன். முற்றும் சரிதான். ஆயின், அவல் சிறிது மாற்றம் பெறல் வேண்டும். மேலும், அவலம் என்பது இதனொடு தொடர்புடைய தன்று. அல்-அ+வலம் = அவலம். வலமின்மை, நோய், வருத்தம் என்னிடம் சிறிது பயிற்சி பெறின் என் போன்றே செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பணியாற்றலாம்.

தமிழ்த் தந்தை

- இரா. இ. 20-11-80

'தமிழர் தந்தை' பெரியார் எனப்படுதல் எவரும் அறிந்தது. தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் எனப்படுதலும் கேட்கக் கூடியது. பாவாணரைத் 'தமிழ்த் தந்தை' என வழங்குதற்குப் பாவாணர் தமிழ்க் குடும்ப நிறுவனரும் செயலருமாகிய அன்புவாணர் அவாவினார். தம் கருத்தைப் பாவாணர் ஒப்புதற்கும் விடுத்தார். 'தமிழ் எழுத்து வடிவு' பற்றிய பாவாணர் கருத்துகளைக் கொண்ட அக்கடிதத்தின் இறுதியில் “தமிழ்த் தந்தை, ஞா. தேவநேயன்" எனப் பொறித்துள்ளார். அவ்வஞ்சல் முகப்பில், "அரும்பெறல் அன்புகெழு தமிழ்மக்காள்" என விளிப்புடைமை கருதிப் பார்க்கப் பெருநயமுடையதாம் (அஞ்சல் நாள்: 31-10-78). தமிழர் யார்?

'தமிழர் யார்?' என்பதை விளக்கும் பாவாணர் தாம் காணும்