உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

179

தமிழர் எவர் என்பதையும் தெள்ளிதின் உரையாலும் பாட்டாலும் உரைக்கிறார்:

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் கொள்கை. தமிழைப் போற்றுவாராயின் தமிழருக்கு மிக நெருக்கமான திரவிடர் மட்டுமன்றி, மராட்டியர் மார்வாடியர் முதலிய வடநாட்டாரும் ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல் நாட்டாரும் தமிழரே.

பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து பிறருக்கொன்றீயாத புல்ல ரேனும் எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார் இரப்பெடுப்பார் ஞதயதொழு நோய ரேனும் கருமைமிகும் ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர்

காடுறையும் விலங்காண்டி மாந்த ரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்பு வாரேல்

அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்

தமிழைப் போற்றுதலாவது, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை ஒப்புக் கொள்வதே," என்கிறார்.

"சங்கநிதி பதுமநிதி" எனத் தொடங்கும் அப்பரடிகள்,

“கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே'

என்பதன் போலிகையாக,

'அருமையுறும் தனித்தமிழை விரும்பு வாரேல்

அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்'

""

என்று அமைத்துக் கொள்ளும் ஊற்றம் பாவாணரதாம்.

மொழிஞாயிறு

பாவாணர் மொழிஞாயிறு எனப்பட்டார். தமிழ் ஞாயிறு எனவும், தனித்தமிழ் ஞாயிறு எனவும் வழங்கவும் பட்டார். மொழியை-தமிழ் மொழியை -ஞாயிற்றொடும் ஒப்பிடுகிறது தண்டியலங்காரம்;

CC

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்