உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னேர் இலாத தமிழ்’

"

என்பது. இப்பாடலைப் பெரிதும் போற்றித் தம் நூல்களில் ஆள்வார் பாவாணர். அவர்தம் அகர முதலித்திட்ட உருவாக்கம் தென்மொழியில் கிளர்ந்த போது (8-9-1970) ‘மொழிஞாயிறு' என்னும் சிறப்படை மொழி பயன்படுத்தப்பட்டதாகும். மொழி ஞாயிறு என்றாலே பாவாணரைக் குறிக்கும் புகழ் மொழியாயிற்று அது.

பட்டங்கள்

என் பெயர்க்குமுன் பண்டித அல்லது பண்டித புலவ என்னும் அடை கொடுக்க வேண்டேன் தமிழில் பேரா. என்றும் ஆங்கிலத்தில் Prof. என்றும் குறிக்க. இதைப் பன்முறை சொல்லியும் தாங்கள் கவனிக்க வில்லை" (16-1-71)

என் பெயர் தேவநேயன்' என்று மட்டும் இருத்தல் வேண்டும்" (2-3-72)

"நூற்பெயர் பெரிய எழுத்திலும் ஆசிரியன் பெயர் சிறிய எழுத்திலும் இருக்க வேண்டும்” (4-3-72)

66

"ஆசிரியன் பெயர் 'ஞா.தேவநேயன்' என்று மட்டும் குறிப்பிடுக. முன்னும் பின்னும் அடைமொழியோ பட்டமோ ஒன்றுமிருத்தல் கூடாது" (3-12-72)

ம்

இவை, கழகத்திற்குப் பாவாணர் எழுதிய செய்திகள். தம் நூலின் அளவுகோல் நூற்செய்தியே! பட்டமன்று என்னும் முடிவுக்குப் பாவாணர் வந்த நிலை விளக்கமாக அமைபவை இவை எனலாம்.

பட்டம் விரும்பார்க்கும் பட்டத்திட்டம்

டாக்டர்

15-10-72 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற தமிழ்ப்புலவர் குழுக் கூட்டத்தில் பழம் பெரும்புலவர் பன்னிருவர்க்கு ட பட்டம் வழங்கப்பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவருள் பாவாணரும் ஒருவர். அங்குத் தீர்மானிக்கப் பட்டவருள் கி.ஆ.பெ.விசுவநாதரும்,ம.பொ.சிவ ஞானமும் பின்னர் அப்பட்டம் பெற்றனர். (பாவாணர்க்குப் பட்டம் தருவதால் வரும் பயன் என்ன?)

- செந். செல். 47 : 181)