உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

உறையுள் வாங்கவும் உரிமை விற்கவும்

காட்டுப்பாடி விரிவில் இருந்தபோது,

181

13-5-72 பாவாணர், கழக ஆட்சியாளர்க்கு ஓரஞ்சல் விடுத்தார். அதன் செய்தி வருமாறு:

"இன்று தாங்கள் எனக்கு ஓர் அரும்பேருதவி செய்ய வேண்டும். நான் குடியிருக்கும் வீட்டுக்காரர் வீட்டை விற்கப் போகின்றார். வீட்டை வாங்குபவர் உடனே என்னை வெளியேற்றுவார். அல்லது 65 உருபா வாடகையை 80- இலிருந்து 100 வரை உயர்த்துவார். வாடகையை உயர்த்துவதிலும் வெளியேற்றுவதும் துன்பந்தரும். இத்தகைய வீடு இங்கு வேறில்லை. சென்னையில் 300 300 உருபாவிற்குக் குறைத்து

கிடையாது.

ஆதலால், இதுவரை நான் எழுதிய பொத்தகங்களின் உரிமை முழுவதையும் விற்று இவ்வீட்டை விலைக்கு வாங்க விரும்புகிறேன். வாங்கின் ஓரறையிற் செந்தண நிலைப்பாடு (A.C) அமைத்துக் காள்ளலலாம்; மேற்கட்டடமும் கட்டிக் கொள்ளலாம்.

தங்கள் வார வெளியீடாக உள்ளனவும் என் சொந்த வெளியீடாக உள்ளனவும் ஆகியவற்றுடன் வேர்ச்சொற் கட்டுரைகளும் சேர்த்துக் கொள்க. வேனில் கழிந்தவுடன் இன்னும் பத்துக் கட்டுரைகள் எழுதித் தருவேன்., பழமொழித் திரட்டும் விற்பேன்.

இவற்றிற்கெல்லாம் நேர்மையான ஒருவிலை தருக. என் நூல்களை வாங்குவது தமிழுக்குச் செய்யும் தலைத்திறத் தொண்டெனக் கருதுக. திருக்குறளுரை திருத்தமும் விரிவும் பெறும். ஒரு கிழமைக்குள் நன்மொழி எதிர்பார்க்கிறேன். எல்லா நூல்களையும் வாங்க இயலாவிடின் வீடுவாங்கும் தொகையளவிற்கு வாங்குக. அது முப்பதினாயிரத்திற்குக் குறையாதிருக்கும் என்கிறார்."

'புன்குடி லாயினும் நன்குடிலாயிருக்க வேண்டும்" என்று ளையர்க்குக் கற்பித்த பாவாணர் (கட்டுரை இலக்கணம் ஐ,பக்.29) கொண்ட முதுமை ஆர்வம் இது! முடிந்ததா? பின்னே முடிந்தது; முடிந்தும் குடிபுக முடியாது முடிந்தது!