உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

வாழைக் கன்று

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ருக்

"என் உறையுளின் புறக்கட்டைப் பக்கம் சிறிது வெறுநிலம் உளது. அதில் காய்கறித் தோட்டம் போட்டிருக்கின்றேன். இரு வாழை வைக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லாத பச்சைவாழை தவிர வேறொன்றும் இங்குக் கிடைப்பதில்லை. 30 கல் தொலை விலுள்ள படைவீடு என்னும் ஊரினின்று மொந்தனும் கப்பல் வாழையும் (அரசதாளியும்) கொண்டுவரச் சொல்லியி கின்றேன். நும் இல்லத்திலுள்ளது எனக்கு மிக விருப்பம். ஆர்க்காட்டு அன்பர் அடுத்த முறை அவர் ஊர் வரும்போது இரு சிறு கன்று கொடுத்தனுப்ப முடியுமா? நான் இன்று ஊதைப் பொருளென்று வாழைக்காய்க்கறி உண்பதில்லை. கொம்பிற் பகுக்கவிட்டு உண்ணவே வாழை வைக்கின்றேன். நான் அண்மையில் அங்கு வரும் நிலைமை இல்லை எனத் தம் ஆர்வத்தை அன்பர் பிச்சுமணியார்க்கு எழுதுகிறார் பாவாணர்.

சுவைப்பற்று

எத்தகைய பேரறிஞர்க்கும் சிலவற்றில் பெரும் பற்றுதல் உண்டாகியிருக்கும். உணவு சிற்றுண்டி வகைகளிலும் அப்படியே!

-

பாவாணர்க்கு இஞ்சி முரப்பு மேல் மட்டமற்ற பற்று. அதன் வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் விரும்பியுண்பார். அதிலும் சேலத்து இஞ்சி முரப்பே அவர்க்குப் பற்றுமையானது. மயிர்க் கிழங்கும் குச்சிக் கிழங்கும் முளரி (Rose) ஊறுகாயும் அப்படியே விரும்பியிருக்கிறார். இவையெல்லாம் அவர் தம் கடிதங்களில் பலபட விளக்கமாகின்றன. புலவூண் விருப்பம் புலப்பாடாகின்றது.

குரு பற்பொடியை மிகப் பயன்படுத்தியிருந்தார்; முட்டை முளை வரை என்னும் ஓவல்டின்னையும் மிக விரும்பி யிருக்கிறார்; தட்டுப்பாடாம் காலத்தில் கூடத் தேடியலைந்து வாங்குவித்துப் பயன்படுத்தியுள்ளமை அறிய வருகின்றது.

மாம்பழம் பலாப்பழம் முதலியவற்றைப் பெரிதும் தள்ளியிருக்கிறார். வாழைப்பழத்திலும் கொம்பில் பழுத் ததையும் ஊதைத்தன்மை இல்லதையுமே பயன்படுத்தி யுள்ளார்.