உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரத்துணி

பாவாணர்

183

பாவாணர்க்குச் சற்றும் ஒவ்வாதது கோடை வெம்மை! எரிநாள் போது (அக்கினி நட்சத்திரம்) இன்னும் பெரும்பாடு பட்டுப் போவார்!

தலையில்

ஈரத்துணியைச் சுற்றிக் கொள்வார்; அனற்காற்றுத் தாக்காவண்ணம் சாளரத்யுைம் ஈருத்துணித் தொங்கலால் மூடிக்கொள்வார். இக்கடுங் கோடையைத் தவிர்க்கக் கோடைவாழ் மலையிடங்களுக்குச் செல்ல நண்பர்கள் அழைத்தாலும், நூலகம் வீட்டில் இருப்பதால் அதனை விடுத்துப்போக முடிவதில்லை. நூலைப் பாராமல் அவரால் இருக்க முடியாதே! செந்தணப்பு அறை வைத்துக்கொள்ள விருப்பிருந்தும் வாய்ப்பு ஏற்படவே இல்லை! வாய்ப்பு உண்டாகி வீட்டில் செந்தணப்பு அமைக்கக் கூடிய நிலைமை நெருங்கியபோது அதனை அடைய அவரில்லை! கோடைக் கொடுமை அவர் கடிதங்களுள் பலவற்றைத் தன்னதாக்கிற்று.

மிதிவண்டி விடல்

மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தார் பாவாணர். அவர்க்கு ஏதோ சொல்லாய்வு கிளர்ந்து விட்டது. அதனை எண்ணிவிட்டால் அவர் தம்மை மறந்து அதிலேயே ஒன்றி விடுதல் இயற்கை!அப்படி மிதிவண்டி நடத்தும் போது ஒருமுறை சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின்மேல் மோதி வண்டியும் சாய்ந்து, சிறுசிறு சிறாய்ப்புகளுடன் தப்பினார். அதன்பின் மிதிவண்டியில் ஏறுவதையே விட்டு விட்டார்.

கிறித்து பெருமான் ஓவியம்

பாவாணர் கடவுட் பற்று மிக்கவர். ஒவ்வொரு நூலிலும் அதற்குச் சான்றுண்டு, ஒவ்வொரு வாழ்த்திலும் சான்றுண்டு. தாம் ருந்து பணி செய்யும் இடத்தில் தம் கண்ணில் நேரேபடுமாறு கிறித்து பெருமான், பாறை மேல் அமர்ந்து மேய்ப்பராய்க்காணும் உயர் ஓவியத்தை வைத்திருந்தார். அப்பட்டத்தை விரும்பித் தேடி வைத்தார் என்பது கடிதத்தால் தெரிகின்றது. அப்படத்தை அணியம் செய்து தந்தவர் மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் சோ. சாமிநாதன்.