உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கிறித்தவப் பிறப்புப்பயன்

மாந்தன் முதன் முதலில் தோன்றிய இடம் ஏதேன் தோட்டமே என்பது கிறித்தவ மதக் கொள்கை. ஆதலால், கிறித்தவர்கள் குமரிக்கண்ட உண்மையை ஒப்புவதிலர்.

கிறித்தவ மதத்தவர் அல்லார் ஏதேன் தோட்டச் செய்தியை மறுத்துக் குமரிக் கண்டமே மாந்தன் பிறந்தகம்' என்று கூறுவதினும், கிறித்தவ மதத்தில் பிறந்த ஒருவரே அவ்வாறு கூறுவது வலுவும் சிறப்புமாம் என்றும், அதற்காகவே இறைவன் தம்மைக் கிறித்தவ மதத்தில் பிறப்பித்தான் என்றும் பாவாணர் கூறினார்.

கடவுள் நம்பிக்கை

பாவாணர் நினைவு மலர். தென்மொழி 67.

பறம்புக்குடி உத.க. மாநாட்டில் திருக்குறள் தமிழ் மரபுரை வெளியிடத் திட்டப் படுத்தப்பட்டது. அது பாவாணர் வெளியீடே யாகும். அட்டைக் கட்டு அச்சீடு ஆகிய வற்றில் கழக ஆட்சியாளர் வ.சு. அவர்கள் பேருதவி புரிந்தார். இந்நிலையில் கழகமே பாவாணர் திருக்குறளுரையை வெளியிடுவதாகக் கருதிக் கொண்டார் பெருமழைப்புலவர் சோம சுந்தரனார்.

"கடவுள் நம்பிக்கை இல்லாத பாவாணர், திருக்குறளுக்கு உரை எழுதக் கழகம் வெளியிடுகிறதா" என வினவினார் சோம் சுந்தரனார்! பாவாணர் கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? அப் பாவாணர் அத்திருக்குறள் தமிழ் மரபுரை நூலைக் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வெளியிடுதல் கூடாது" என்று! ஆய்ந்து தெளிந்து ஒரு முடிவுக்கு வராமல் தமக்குப் பட்டதே முடிவெனக் கொள்வது ஆய்வாளர்க்குள்ளும் எத்தனை விரிசல்களை - பிளவுகளை உண்டாக்கியுள்து!

ஓஓ! பொழுதாய் விட்டது

-

பாவாணரை ஒருவர் பார்க்க வருகிறார்; வணக்கமிடுகிறார்; அவரை வரவேற்று உரையாடத் தொடங்கு கிறார். எத்தனைமணி நேரம் ஆனது? வந்தவர் எதற்காக வந்தார்? இருவரும் உண்ண வேண்டிய பொழுதா? அடுத்த பணி என்ன? ஒவ்வொன்றையும் கருதாமல் காலம் தானே ஓடிக் கொண்டிருக்கும்! பாவாணர் நா பேசிக் கொண்டிருக்கும்! வந்தவர் வண்டிப் பொழுதோ,