உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

185

வேறுகுறியோ உடையவராய் ஏதோ குறிப்புடன் அசைந்தால், "ஓஓ! பொழுது ஆய்விட்டது! போக வேண்டும் அல்லவா!" என்பார்.அப்பொழுதுதான் பாவாணர், தம் சொல்லாய்வு உலகத்தில் இருந்து இந்த இயல்பு உலகுக்கு வருவார்; போய் வாருங்கள் என்பார். வந்தவர் பெயரென்ன? ஊரென்ன? எதற்காக வந்தார்? இவ்வெவற்றைப் பற்றியும் கேட்பதும் இல்லை! கேட்டுக் கொண்டு உரையாடுவதும் இல்லை! "யாதும் ஊரே! யாவரும் கேளிர்" என்பதன் தெளிநிலையா இது!

பாவாணர் எழுதிய கடைசி அகரமுதலிச்சொல்

தம் வாழ்வையே தமிழாராய்ச்சிக்காகவும் தமிழின் தனித் தன்மையைக் காப்பதற்காகவும் காணிக்கையாக்கிக் கொண்ட மொழி நூல் மூதறிஞர் பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முதன்மடலத்தின் முதற் பகுதியை எழுதி முடித்து இரண்டாம் பகுதியைத் தொடங்கினார்.

அவர் இம்மண்ணுலகை விட்டு நீங்குமுன் விளக்கம் எழுதிய கடைசி அகரமுதலிச் சொல் 'ஆசைமொழி'

தமிழ் மொழியின் மீது தாம் கொண்டமாளாத ஆசையைத் தமிழுலகிற்குக் காட்டும் பொருட்டே 'ஆசைமொழி' என்னும் சொல்லோடு அவர்தம் அகர முதலிப் பணியை முடித்துக் கொண்டாரோ என எண்ணி எண்ணி மாழ்க வேண்டியுள்ளது.

இரா. மதிவாணன் செந்.செல். 55.398

சிறித்தவப் பாவாணர் சிவனியக் கரணமுறை சீரிதின் எழுதுகிறார்:

உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும் பெரிய புராணக் கடவுள் வாழ்த்தையாவது அதை யொத்த திருப்பதிகச் செய்யுளையாவது பாடிக் கரணத்தைத் தொடங்கச் சொல்லலாம்.

மாதர் பிறைக் கண்ணியானை என்னும் திருவையாற்றுப் பதிகத்தையும் மண்ணினல்லவண்ணம் வாழலாம் என்னும் திருக்கழுமலப் பதிகத்தையும் முன்னும் பின்னுமாகப்பாடுவது பொருத்தமாகும். இசையின்றி ஓதுவதை விட இசையுடன் பாடுவதே நன்று.