உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அன்பர் மு.வ.பரமசிவனார்க்குச் சைவநெறிச் சடங்கு குறித்துப் பாவாணர் வரைந்த கடிதச் செய்தி இது (24-1-75).

நினைவு இதழ்கள்

தேவநேயப் பாவாணர் படத்தை முகப்பில் கொண்ட தமிழம் முதல் இதழ் வெளிவந்தது. உலக முதல்வி, 17, நாகப்ப முதலி தெரு, சென்னை - 12 என்பது ஆசிரியர் முகவரி.

அரண முறுவல் அவர்களை ஆசிரியராகக் கொண்ட தமிழியக்க இதழ்: இயக்கம்! நடை 8. பாவாணர் நினைவிதழாக வெளிவந்தது. பாவாணர், ஒலிவாங்கி முன் நின்று உரையாற்றுவது போன்ற அமைப்புடையது முகப்புப்படம். முதன் மொழியும் மீட்போலையும் மலர்களாய் மலர்ந்தன; அவற்றில் பாவாணர் படங்கள் உண்டு. நாங்கள் காணும் பாவாணர், பாவாணர் தமிழ்க் குடும்ப வெளியீடு. செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி ஆகியவையும் விரிந்த செய்திகளையும் படங்களையும் கொண்டு நினைவிதழ் களாக வெளிவந்தன (1981. பெப்) முன்னும் பின்னும் இடையும் பாவாணர் வரலாற்றுத் திரட்டாக வாய்த்த இதழ்கள் இவை. வியப்பும் திகைப்பும்

திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழ்ப் புலவர்கள், அரசியல் தொண்டர்கள், சமயச் சான்றோர்கள், தொழிலாளர் தோழர்கள், இன்னோர் வரலாற்றுக் குறிப்புகளின் பெட்டக மாகவும் விளங்குதல் எவரும் அறிந்தது. ஓரிருமுறைகளில் தொடர்புடை யாரையும் ஒழிவின்றிக் குறிப்பிட்டுச் செல்லும் நினைவுக் கொழுமையது. முதுவரைப் போற்றுவதுடன் இளையரை வரவேற்றும் வாழ்த்துக கூறுவது. முரணி நின்றாரையும் அரணாம் பகுதி கூறி அரவணைத்துச் செல்வது. அத்தகு வாழ்க்கைக் குறிப்பில் பாவாணர் ஓரிடத்தும் சுட்டப் படாமை வியப்பும் திகைப்புமாம் தன்மைய.

ஒருவர் பட்டறிவு வெளிப்படாமல் போகாது; அவற்றுள்சில :

இக்காலத்தில் தமிழுக்கே உழைப்பவர்க்கும் தமிழை வளர்ப் பவர்க்கும் தூற்றலும் வேலைக்கேடும் தவிர வேறொன்றுமில்லை. ஆனால், தமிழைக கெடுப்பவர்க்கோ போற்றலும் பட்டம் பதவிகளும் பரிசளிப்பும் பணமுடிப்பும் நிரம்ப உண்டு.

- கட்டுரை இலக்கணம் பக்: 283.